மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை பாஜக அரசு நிச்சயம் நிறைவேற்றும் என மக்களவையில் மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் இன்று விவாத நேரத்தின் போது பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், “பெண்களுக்கான சம உரிமைகுறித்து அனைத்து கட்சிகளும் பேசுகின்றன. ஆனால் அதனை நிறைவேற்ற முனைப்புடன் இருப்பது பாஜக தான்.

குஜராத்தில் ஒருபெண்ணை முதல்வராக்கினோம், அவையிலும் பெண்களுக்கு 25% பங்கு வழங்கப்பட்டுள்ளது. நமது அவைத் தலைவர்கூட பெண்தான்.

நான் இப்போது இங்கிருக்கும் அனைத்து உறுப்பினர்களையும் கேட்டுக் கொள்வது, மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவெற்றும் போது, அதற்கு அனைத்துகட்சி உறுப்பினர்களும் ஆதரவு அளிக்கவேண்டும்.

காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது, இந்த மசோதாவிற்கு பாஜக ஆதரவு அளித்தது என்பதை மறந்துவிட கூடாது.

பெண்களுக்கு எதிரான வன் முறைகளை எந்த வகையிலும் சகித்துக் கொள்ள கூடாது என்று, நாட்டில் நடந்து வரும் சிலமோசமான சம்பவங்கள் நமக்கு உணர்த்துக்கின்றன. இதுபோன்ற வன்முறைகளை ஒடுக்க பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு உதவி புரியும்” என்று சுஷ்மா அவையில் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.