மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் நிர்மலா சீதா ராமன் ஜூன் 14ம் தேதி சென்னைவருகிறார்.

தமிழகத்தின் திருச்சிமாவட்டத்தில் பிறந்த நிர்மலா சீதாராமன், அங்குள்ள சீதாலட்சுமி ராமசாமி மகளிர் கல்லூரியில் படித்தவர். திருமணத்துக்கு பிறகு ஆந்திரத்தில் குடியேறிவிட்ட அவர். கடந்த மே 26ம் தேதி நரேந்திரமோடி தலைமையிலான அமைச்சரவையில் வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் தனிப் பொறுப்புடன் கூடிய இணை அமைச்சராக பொறுப்பேற்றார். நிதி, கம்பெனி விவகாரம் ஆகிய துறைகளின் இணை அமைச்சராகவும் அவர் செயல்பட்டுவருகிறார்.

மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்றபிறகு முதல் முறையாக ஜூன் 14ஆம் தேதி சென்னை வருகிறார். தமிழக பாஜக அலுவலகமான கமலாலயம்வரும் அவர், தனது அமைச்சகம் தொடர்பான சில கூட்டங்களிலும், தொழில்வர்த்தக சபைகளின் கூட்டங்களிலும் பங்கேற்கிறார்.

மீனம் பாக்கம் விமான நிலையம், தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகம் ஆகிய இடங்களில் நிர்மலா சீதாராமனுக்கு சிறப்பானவரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

Leave a Reply