நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பா.ஜ.க அரசின் முதல்பட்ஜெட் இருக்கும் என மத்திய வர்த்தகம், தொழில், கம்பெனி விவகாரங்கள் மற்றும் நிதித்துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமை தமிழகம் வந்த அவர், பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது :

நேரடி அன்னிய முதலீடு மற்றும் சிறப்புபொருளாதார மண்டலங்களை திருத்தியமைப்பது குறித்த ஆய்வை மத்திய அரசு தற்போது மேற்கொண்டு வருகிறது. அதேபோல பங்குதாரர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாகக் கூறப்படும் கம்பெனி சட்டங்களை திருத்தியமைப்பது குறித்த ஆலோசனை கூட்டமும் நடத்தப்பட உள்ளது. அடுத்த சனிக் கிழமை தில்லியில் நடைபெற உள்ள இந்த ஆலோசனை கூட்டத்தில், கம்பெனி சட்டத்தில் வர்த்தகவளர்ச்சியை பாதிக்கும் விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.

சில்லறை வர்த்தகத்தில் அன்னியநேரடி முதலீட்டை அனுமதிக்க கூடாது என்பதில் அரசு, தீர்மானமாக உள்ளது. சில தனியார்தொண்டு நிறுவனங்களுக்கு அரசு வழங்கிய நிதியை, அந்நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்தியாக மத்திய உளவுத்துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை குறித்து ஆராய்ந்தபிறகே இந்த பிரச்னைக்குத் தீர்வு காணமுடியும்.

இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவதற்கு தீர்வுகாண மத்திய அரசு ஆக்கப் பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, காவிரி பிரச்னையில் அவர் நேரடியாக தலையிட்டு தீர்வுகாண முயன்றார். அதேபோல தற்போது மத்தியில் ஆட்சியமைத்துள்ள அரசும் இப்பிரச்னையில் நேரடியாக தலையிட்டு தீர்வுகாண முயற்ச்சிக்கும்.

பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. வர்த்தகம், தொழில் உள்பட பொருளாதார வளர்ச்சிக்கான பட்ஜெட்டாக அது அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் உப்பு உற்பத்தி, மஞ்சள்சாகுபடி, உணவு உற்பத்தியில் வர்த்தக வாய்ப்புகளையும், வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தி தருவதற்கான முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார் அவர்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.