முதல்வர் பதவி ஏற்கும் முன்பே.மோடிக்கு முன் ஏராளமான பிரச்சைனைகள்.. கேசுபாய் பட்டேல் விட்டு சென்ற அதிருப்தி, நிர்வாகதிறமை அற்ற ஆட்சி, "பூஜ்"–பூகம்பத்தினால் ஏற்பட்ட மிகப்பெரும் சேதம், தான் எம்.எல்.ஏ வாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய கட்டாயம், தான் தாக்கல்

செய்ய வேண்டிய முதல் பட்ஜெட்,..இன்றுவரை அதிகமாக விமர்சிக்க பட்டுக்கொண்டிருக்கும், கோத்ரா ரயில் எரிப்பு மற்றும் அதை தொடர்ந்த குஜராத் கலவரம்…

இவற்றோடு ஆட்சியில் அமர்ந்து 2002 அக்டோபரில் நடந்த சட்டமன்ற தெர்தலில் 3இல் 2பங்கு மெஜாரிட்டி வெற்றி– தொடர்ந்து மூன்றுமுறை அதேபோல் வெற்றி- இன்று மத்தியில் ஆட்சியை பிடித்தது வரை–"வெற்றியின் வரைபடம் " ஏறுமுகம் மட்டுமே..இது எப்படி மோடியால் சாத்தியமாயிற்று?

ஒருபக்கம் ஆட்சியை தக்க வைத்துக்கொண்ட விதம், இன்னொறு புறம் குஜராத் கலவர எதிர்ப்புக்குரல்களுக்கு பதிலடிகள், மூன்றாவதாக குஜராத்தை வளர்ச்சிப்பாதையின் உச்சிக்கு கொண்டு சென்றது..இவை மூன்றுக்கும் அவருக்கு உதவியது யார்? அவரால் இச்சோதனைகளில் எப்படி வெற்றி காணமுடிந்தது?

இவற்றிக்கெல்லாம் காரணம் இரண்டு..முதலில் ஒன்றை மட்டும் சொல்கிறேன்.. குஜராத் மாநில அரசு அதிகாரிகள்..அவர்களின் முழு திறமையும் மோடி பயன் படுத்திக்கொண்டார்..

எல்லா மாநிலத்திலும் இருக்கும் "அரசு நிர்வாகம்–அதிகாரிகள்" தானே குஜராத்திலும் உள்ளது..மத்திய தேர்வாணைக்குழு பயிற்சி அளித்த அதிகாரிகள் நாடெங்கும் உள்ளது போலேயேதான் குஜராத்திலும் உள்ளனர்..அப்படியானால் குஜராத்தில் உள்ல அதிகாரிகளால் மட்டும் எப்படி இவ்வளவு சாதனைகளை செய்ய முடிந்தது? ஜயலலிதாவால் வாங்க முடியாத வேலையை மோடி எப்படி வாங்கினார்?

இதுதான் மோடியின் வெற்றி ரகசியம்..இதற்கு உதவியது அவர் ஆர்.எஸ்.எஸ்ஸில் பெற்ற பயிற்சிகள்.. மோடி பதவி ஏற்ற உடனேயே ஒவ்வொரு துறை அதிகாரிகளையும் தற்போது கூட்டியது போல கூட்டி பேசினார்..நாள் முழுதும் அவர்களோடு அமர்ந்தார்..தற்போது கேட்டது போல "துறை அறிக்கைகளை" கேட்டறிந்தார்..

இதோடு நிற்காமல் அதிகாரிகளின் குறைகளையும் கேட்டு நிவர்த்தி செய்தார்..அவர்களுக்கு உரிய மரியாதையும் அளித்தார்..மோடி அவர்களை "பூதமாக" காட்டும் ஊடகங்கள் மோடியுடன் ஒருநாள் நேரில் சென்று பார்த்து வருமானால், அவர் எப்படி அதிகாரிகளிடம் பழகுகிறார், நட்புடன் இருக்கிறார், எனபது புரியும்..தன்னுடைய சமயல்காரர் "பத்ரி"– முதல் சீஃப் செகரட்ரி வரை –மோடி எல்லோரிடமும் ஒரேமாதிரி பழகுவார்..இதை பிரதமர் அலுவலகத்தை மோடி சுற்றிப்பார்த்ததாக பத்திரிக்கையில் வந்த "போட்டோக்களை" பார்த்தாலே புரியும்..இது அவருக்கு ஆர்.எஸ்.எஸ் கற்றுத்தந்த பாடம்..

எல்லா அதிகாரிகளிடமும் சமமாக பழகினாலும், திறமையானவர்களை கண்டுபிடித்து, அவர்களுக்கு பாராட்டுக்களும், பதவி உயர்வும் வழங்குவார்..அதேபோல் திறமைக்கு ஏற்ப பணிகளும் காத்திருக்கும்."திறமையானவர்களுக்கே சவால்கள் காத்திருக்கும் பதவிகள் வழங்கப்படும்–அதிகாரிகள் தங்கள் நினைக்கும் பதவிகளுக்கு அவர்களாகவே செல்லமுடியாது" என விஞ்ஞான தொழில் நுட்பதுறை தலைமை செயலாளர் ரவி சக்சேனா என்ற அதிகாரி கூறுகிறார்…2001 பேட்ச் இளம் ஐ.ஏ.எஸ்.அதிகாரி..வதோதரா கலெக்டர் வினோத் நெஹ்ராவின் சிறப்பான செயல் பாட்டிற்காக அவரை முதல்மந்திரியின் அலுவலகத்திற்கு அழைத்துக்கொண்டதிலிருந்தே இது உண்மையாகிறது..

இதோடு கூட மோடியின் நிழலாக அவருக்கு துணைபுரியும், தலமை முதல்மை செயலாளர் "கேகே" என்று அழைக்கபடும் கைலாசநாதன், முதல்வர் அலுவலக செயலாளர் தமிழரான திருப்புகழ், முதன்மை செயலாளர் "முர்மு"…தலமை இணை செயலாளர் ஏகே.சர்மா, குஜராத் விவசாய உற்பத்தியின் சாதனையாளர் முதன்மை செயலாளர் ராஜ்குமார், மின்னுற்பத்தியில் தன்னிறைவு மற்றும் சூரிய மின்னுற்பத்தியில் சாதனை படைத்த தமிழரான தலைமை இணை செயலாளர் ஜகதீச பாண்டியன், அரசு நிவாகததை சிறப்பாக்கிய பொது நிர்வாக செயலாளர் ஸ்ரீனிவாஸ், என்ற அதிகாரி—-

தொடரும்—

நன்றி ; எஸ்.ஆர். சேகர் எம்.ஏ.பி.எல்

பாஜக மாநிலப் பொருளாளர்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.