சென்னை அம்பத்தூர் அருகே மண்ணூர்பேட்டை மலையத்தம்மன் கோயில்தெருவை சேர்ந்தவர் சுரேஷ் குமார் (48). இவரது மனைவி புவனேஸ்வரி (40), இவர்களுக்கு கிருஷ்ணவேணி (10), கிரேன்மைக்கா (8) ஆகிய மகள்கள் உள்ளனர். இவர்களது சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம்

திங்கள்சந்தையை அடுத்த கக்கோடு கிராமமாகும். சுரேஷ்குமார், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இந்து முன்னணி தலைவராக இருந்தார். இவரது அலுவலகம் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள மேற்குமண்டல போலீஸ் இணை கமிஷனர் அலுவலகம் அருகே சி.டி.எச். சாலையில் உள்ளது. இதன் அருகிலேயே காவல் உதவிமையம் செயல்பட்டு வருகிறது. மேலும், சுரேஷ் குமார் வாடகைவேன் வைத்திருந்தார். அதில் மாணவ, மாணவிகளை பள்ளிக்கு அழைத்துசெல்வார்.

மற்ற நேரங்களில் இயக்கபணிகளை தீவிரமாக கவனித்துவந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் வழக்கம் போல, அலுவலகத்தை பூட்டி விட்டு வெளியே நடந்துசென்றார். அப்போது பைக்கில் வந்த 3 பேர், சுரேஷ் குமாரை சுற்றி வளைத்து, பையில் மறைத்து வைத்திருந்த அரிவாள், கத்தியால் சரமாரியாக வெட்டினர்.

இதை தடுக்க வந்த பக்கத்து கடைக்காரர் ரவிகுமாருக்கும் வெட்டு விழுந்தது. இதையடுத்து, அவர் அலறியடித்து ஓடினார். தலையிலும் மார்பிலும் பலத்த வெட்டு விழுந்ததில், ரத்த வெள்ளத்தில் அலறி துடித்தபடி சுரேஷ்குமார் கீழே சாய்ந் தார். அதற்குள் 3 பேரும் அங்கிருந்த பைக்கில் ஏறி தப்பிவிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இவர்களின் சத்தம் கேட்டு உதவி மைய போலீ சார் மற்றும் அக்கம்பக்க வியாபாரிகள் ஓடி வந்தனர். உயிருக்கு போராடிய சுரேஷ் குமாரை ஆட்டோவில் ஏற்றி அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்து வமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

இந்த சம்பவத்தை கண்டித்து சுரேஷ்குமார் சடலத்துடன் மருத்துவமனை அருகே நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து இணை கமிஷனர் சண்முகவேல், துணை கமிஷனர் மயில்வாகனன், அண்ணாநகர் உதவி கமிஷனர் நந்தகுமார் சம்பவ இடத்துக்கு வந்தனர். சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லமுயன்ற போலீசாரை தொண்டர்கள் தடுத்தனர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்தால்தான் சடலத்தை தருவோம் என அவர்கள் கூறினர். கொலையாளிகளை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கிறோம் என போலீசார் உறுதியளித்தனர். இதனை அடுத்து தொண்டர்கள் அனைவரும் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனர். பின்னர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இந்நிலையில், கொலையாளிகளை கைதுசெய்ய கோரி சுரேஷ் குமார் சடலம் வைக்கப்பட்டிருந்த கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனை எதிரில் பாஜ சார் பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், கொலை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய கோரி கோஷங்களை எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.