அஸ்ஸாமின் நகராட்சிகளுக்கான தேர்தலில் 74ல் 38 இடங்களை பிடித்து பாஜக மகத்தான் வெற்றி பெற்றுள்ளது.

மொத்தம் உள்ள 743 வார்டுகளில் பா.ஜனதா 340 வார்டுகளை கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் 232 வார்டுகளிலும், அசாம் கண பரிஷத் 39 வார்டுகளிலும், ஏஐயுடிஎப் 8 இடங்களிலும், என்சிபி 4 வார்டுகளிலும் பிபிஎப் மற்றும் சிபிஎம் தலா ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளன. 77 வார்டுகளில் சுயேட்சைகள் வெற்றி பெற்றுள்ளனர்.

74 நகர சபை மற்றும் கமிட்டிகளில் பா.ஜனதா 38 அமைப்புகளை கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் 17 அமைப்புகளையும், அசாம் கண பரிஷத் 2 அமைப்புகளையும், என்சிபி ஒரு அமைப்பையும் கைப்பற்றியிருக்கிறது.

2009-ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 400-க்கும் மேற்பட்ட வார்டுகளில் வெற்றி பெற்றது. அசாம் கண பரிஷத் இரண்டாவது இடத்தையும், பா.ஜனதா மூன்றாவது இடத்தையும் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

Tags:

Leave a Reply