நான் பிறந்தபோது, பெண்குழந்தை குடும்பத்துக்கு பாரம் என கூறி என்னை கொல்லுமாறு எனது தாய்க்கு சிலர் அறிவுரை கூறினர் என்று மத்திய மனிதவள அமைச்சர் ஸ்மிருதி ரானி தெரிவித்துள்ளார் .

மத்திய மனிதவள அமைச்சர் ஸ்மிருதி இரானி கல்லூரி மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்ததாவது:

நான் பிறந்த போது, எனது தாயிடம் அக்கம் பக்கத்தை சேர்ந்தவர்கள், என்னை கொன்று விடுமாறு வற்புறுத்தியுள்ளனர். பெண்குழந்தை குடும்பத்துக்கு பாரம் என்பதால் அதை வளர்க்கவேண்டாம் என்று தாயிடம் கூறியுள்ளனர். ஆனால் எனது தாய் தைரியசாலி. எனது குழந்தையை வளர்க்க எனக்குதெரியும் என்று கூறி என்னை வளர்த்தார். இதன் காரணமாகவே உங்கள் முன்னால் நான் இப்படி அமைச்சராக நிற்க முடிகிறது.

பெண் சிசு கொலையை கட்டுப் படுத்துவது இந்த அரசின் முக்கிய நோக்கமாகும். ஒருபெண் கல்வி பயின்றால் அது அவளோடு நிற்காது. அந்த குடும்பத்துக்கே அறிவுகிடைக்கும். இதன் மூலம், நாடு விரைவில் வளர்ச்சியடையும். வேலையில்லாத திண்டாட்டத்தை ஒழிக்க, ஏட்டுக்கல்வியுடன், நடைமுறைக்கு தேவைப்படும் கல்வியையும் கற்பிக்க அரசு நடவடிக்கை எடுக்கும். வறுமையைகண்டு மாணவ, மாணவிகள் பயந்துவிடாதீர்கள். நமதுபெற்றோர் அதிக கட்டணம் வாங்கும் கல்வி நிறுவனங்களுக்கு அனுப்ப வில்லையே என்று யாரும் மனம் தளர்ந்து விடாதீர்கள். நானும் கூட நடுத்தர குடும்பத்தில் பிறந்துதான் இப்போது அமைச்சராகியுள்ளேன்.என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.