பிறப்பினால் இழிவாக சிலரால் சொல்லப் பட்டாலும் கூட ஹஸ்தினாபுர மக்கள் அனைவராலும் அன்புடன் மதிக்கப் பட்டார் விதுரர்!! இளமை முதலே தனிமை விரும்பியாகவும் தர்ம சிந்தனையுடனும் இருந்த அவர் பல விதமான தர்மங்கள் பற்றி நமக்கு எடுத்துச் சொன்ன கருத்துக்கள் எல்லாம் 'விதுர நீதி' என்னும் பொக்கிஷமாக இன்றும் உள்ளன!! விதுரர் தமது ஞானத்தினாலும் பணிவுத்தன்மையாலும் ஹஸ்தினாபுரத்தின் மகாமந்திரியாக விளங்கினார்!! காலத்தின் தேவைக்கேற்பத் தன் கருத்துக்களையும், செயல்பாடுகளையும் அவர் செய்தே வந்தார்!!

அவருடைய சிறந்த செயல்பாட்டில் ஒன்றாக அமைவது அரக்கு மாளிகை பற்றிய நிகழ்வு!! எப்படியேனும் பாண்டவர்களைக் கொன்று விட வேண்டும் என்று பொறாமையினால் முடிவு செய்த துரியோதனன் ஒரு பெரும் மாளிகையை மரத்தாலும் , அரக்குக் கலந்த கலைவை மூலமும் உருவாக்கி அதில் அவர்களைக் குடியமர்த்தினான்!! அவர்கள் சதித் திட்டம் பாண்டவர்களுக்குத் தெரியாமல் அங்கு குடியேறினர்!!

ஒரு மந்திரி என்பவனுக்கு நாட்டில் நிகழும் நல்ல/கெட்ட நிகழ்வுகளை ஒற்றர் மூலம் எப்படியேனும் அறிந்து அதற்கேற்ப நடவடிக்கைகளை எடுக்கும் திறன் இருக்க வேண்டும்!! அது விதுரரிடம் இருந்தது!! ஒற்றர் மூலம் இதை அறிந்த விதுரர் என்ன செய்வது என்று மனதுக்குள் சிந்தித்தார்!! இதை பகிரங்கமாக பீஷ்மர் மற்றும் திருதராஷ்டிரனிடம் தெரிவித்துப் பயன் இல்லை!! ஏனென்றால் அவ்வாறு செய்தால் அந்தத் திட்டம் வேண்டுமானால் முறியடிக்கப் படலாம் !! ஆனால் துரியோதனன் அவர் மீது கடும் கோபம் கொண்டு அவர் செயல்பாடுகளை முடக்கி விடலாம்!! அது பாண்டவர்க்கு இன்னும் தீமையைத் தரும் !! அவர் செயல்பாட்டை முடக்கி அப்புறம் அவர் அறியாத வகையில் பாண்டவரைக் கொல்ல முயற்சி செய்யலாம்!! அது நடக்காத வகையில் ஏதேனும் செய்து அதே நேரம் செய்தது தான்தான் என்று அரக்கு மாளிகை துரியோதனன் உணராத வகையில் பாண்டவர்களைக் காக்க வேண்டும் என்று முடிவு செய்தார் விதுரர்!!

அதனால் தேவ லோக சிற்பி மயன் மூலம் அந்த மாளிகைக்கு பாண்டவர் வருமுன்பே அங்குள்ள ஒரு அறையில் இருந்து பூமிக்கு அடியில் நீண்ட சுரங்கம் ஒன்றைத் தோண்டி அது காட்டுக்குள் சென்று முடிவது போல அமைத்தார்!! துரியோதனன் அரக்கு மாளிகைக்கு தீ வைக்கும் நாள் பற்றிய செய்தி அறிந்ததும் அதற்கு முதல் நாள் ஒரு நம்பகமான ஒற்றன் மூலம் பாண்டவர்க்கு ரகசிய செய்தி ஒன்றை அனுப்பினார்!!

'' காட்டில் உருவாகும் பெரும் தீயில் அனைத்து உயிரினங்களும் மாட்டிக் கொண்டு செத்து விடும்! ஆனால் புத்தியுள்ள எலியோ தான் ஏற்கேனவோ தோண்டி வைத்துள்ள வளை மூலம் பூமிக்கு அடியில் சென்று ஒளிந்து கொண்டு தப்பிக்கும்'' என்பதே அந்த செய்தி!!

இது அர்த்தம் பாண்டவருக்கு புரியவில்லை என்றாலும் ஞானியான சகாதேவன் இது ஏதோ ஆபத்து பற்றிய சமிக்ஞை என்று புரிந்து கொண்டான்!! அடுத்த நாளில் அரக்கு மாளிகை தீ வைக்கப்பட்டு புகை சூழ்ந்த நேரத்தில் இந்த செய்தியை நினைவு கூர்ந்த சகாதேவன் சுரங்கம் இருந்த இடத்தைக் கண்டுபிடித்து அதன் மூலம் பாண்டவர்கள் வெளியேறித் தப்பித்தனர்!!!

இது போன்ற நிகழ்வுகள் இன்றும் உலக அரசியலில் வேறு வடிவங்களில் நிகழ்வது குறிப்பிடத்தக்கது!!!

நன்றி ;#‎TREASURES_OF_HINDUISM‬
‪#‎Dhrona_charya‬

தொடரும் …..

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.