இவ்வாறு பற்பல வழிகளில் திருதராஷ்டிரன் மற்றும் துரியோதனாதிகளால் இடித்துரைக்கப் பட்டாலும் விதுரர் தமது கடமையில் கண்ணாக இருந்தார்!! கடைசி வரையில் ஹஸ்தினாபுரத்துக்கும் துரியோதனனுக்கும் நல்லதையே அவர் உரைத்தார்!! ஆயினும் துரியோதனின் கெட்ட மனநிலையால் அவை அவன் காதுகளில் ஏறவில்லை!!

கடைசியாக குருஷேத்ரப் போர் வரும் நிலையிலும் கூட விதுரர் போரைத் தடுக்க பெருமுயற்சி மேற்கொண்டார்!! ஆனாலும் போர் வருவதை அவரால் தடுக்க முடியவில்லை!!!

பாண்டவர் தூது வந்த கண்ணனின் செயல் விதுரனின் சிறப்பை நமக்கு உணர்த்துகிறது!! தூது வரும் கண்ணனை மடக்கி தன் பக்கம் திருப்ப வேண்டி துரியோதனன் கண்ணனை வரவேற்க அரண்மனையில் மிகச்சிறந்த ஏற்பாடுகளை செய்து வைத்திருந்தான்!! ஆனால் கண்ணனின் தேரோ நேராக விதுரரின் குடிலுக்கு சென்றது!! தம்மை வரவேற்ற விதுரனின் கண்ணில் நீர் திரண்டு நிற்பதைக் கண்ட கண்ணன் ''விதுரரே பாண்டவருக்காக கவுரவரிடம் தூது வந்த நான் அவர்களின் அரண்மனையிலேயே தங்குவது ஏற்புடையதாகாது!! அதுவன்றி வேறு எங்கு தங்கலாம் என்று எண்ணும் போது தர்மாத்மாவான உங்களின் வீடில்லாமல் வேறெங்கு தங்க இயலும் ? கவுரவர் அரண்மனையில் தரும் அறுசுவை விருந்தை விடவும் உங்கள் குடிலில் நீங்கள் தரும் கஞ்சியையே நான் விரும்பி உண்பேன்!!!'' எனக் கூறி அரவணைத்தான்!!!

கண்ணன் தூது சென்று ஹஸ்தினாபுர அவையில் ஏளனம் செய்யப்பட நேரத்தில் கடைசியாக ஐந்து வீடாவது கொடுக்க வேண்டிக் கண்ணன் கேட்க அதையும் மாட்டேன் என மறுத்தான் துரியோதனன்!!! ஆனால் விதுரரோ அப்போதும் திருதராஷ்டிரனிடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லி மன்றாடினார்!! ஆனால் எதுவும் அவன் காதுகளில் ஏறவில்லை!!! கடைசியாக மகாபாரதப் போர் நடந்தே தீரும் நிலை தோன்றி விட்டது!!! அந்த நிலையில் ஹஸ்தினாபுரமே அழிவதைத் தமது கண்ணால் காணச் சகிக்காத விதுரர் அரண்மனையைத் துறந்து தீர்த்தயாத்திரை மேற்கொண்டு விட்டார்!!

முற்பிறவியில் மாண்டவ்ய மகரிஷி என்னும் ஞானியை செய்யாத தவறுக்காக யமதர்மன் கழுவிலேற்ற அப்போதும் அவனைச் சபிக்காமல் கண்ணில் நீர் முட்ட கழுவின் வலியைப் பொறுத்து நின்ற ரிஷியின் தவநெருப்பே யமனை பூமியில் விதுரனாக அடுத்த பிறவி எடுக்க வைத்தது என்னும் கதை உண்டு!!! தன்னிடம் தவறில்லாமலே யமன் தண்டித்ததால் அடுத்த பிறவியில் தவறில்லாத நன்மையையே எல்லோருக்கும் சொன்னபோது கூட அதை யாரும் ஏற்காமல் ஏளனம் செய்யப்பட்டு வாழ்நாள் முழுதுமே விதுரர் வாழ்ந்ததாகவும் சொல்லப் படுகிறது!!!

எது எப்படி இருந்தாலும் ஹஸ்தினாபுர அரண்மனையில் பீஷ்மர், துரோணர், கிருபர் போன்ற பெரியோர்கள் எல்லாரும் செஞ்சோற்றுக் கடனுக்காக எந்த அறிவுரையும் சொல்லாமலே மவுனம் காத்த வேளையில் எல்லா நேரங்களிலும் எவருக்கும் அஞ்சாமல் தர்மத்தை உபதேசித்த விதுரரின் அறநெறி போற்றுதலுக்குரிய ஒன்றாகும்!!! விதுரர் நமக்கெல்லாம் தர்மம் குறித்து உபதேசித்துள்ள விதுர நீதி எக்காலத்திலும் பொருந்தி நிற்கும் சிறப்புப் பெற்ற நூலாகும்!!!

நன்றி ;#‎TREASURES_OF_HINDUISM‬
‪#‎Dhrona_charya‬

தொடரும் …..

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.