நாக்பூர் வடக்கு– நாக்பூர் தெற்குபகுதியை இணைக்கும் மெட்ரோரெயில் திட்டத்துக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் நரேந்திரமோடி 21–ந் தேதி நாக்பூர் வருகிறார்.

பிரதமர் நரேந்திர மோடி வருகிற 21–ம் தேதி டெல்லியில் இருந்து மராட்டியமாநிலம் விதர்பா மண்டலத்தில் உள்ள நாக்பூர் மற்றும் வார்தா மாவட்டங்களுக்கு வருகிறார். அப்போது அவர் வார்தாமாவட்டத்தில் உள்ள தியோலிபகுதியில் அமைக்கப்பட்டுள்ள 765/400 கிலோ வாட் திறன்கொண்ட துணை மின்நிலையத்தை தொடங்கி வைக்கிறார்.

மேலும் துல்ஜா பூர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சாலையை திறந்துவைக்கிறார். பிறகு அங்கிருந்து அவர் நாக்பூர்செல்கிறார்.

அங்கு நாக்பூர் வடக்கு– நாக்பூர் தெற்குபகுதியை இணைக்கும் வகையில் செயல்படுத்தப்பட உள்ள நாக்பூர் மெட்ரோரெயில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்ததும் பிரதமர் நரேந்திரமோடி தனிவிமானத்தில் டெல்லி திரும்புகிறார். இதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

பிரதமராக பதவி ஏற்றபின் நரேந்திரமோடி விதர்பா மண்டலத்துக்கு வருவது இதுவே முதல் முறை ஆகும். இந்த தகவலை வார்தா எம்.பி. ராம்தாஸ்தாஸ் தெரிவித்தார்.

Leave a Reply