இலங்கை போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிறை வேற்றப்படும் நலத்திட்டங்களுக்கு இந்தியா தொடர்ந்து உதவிசெய்யும் என மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது .

இதுதொடர்பாக மாநிலங்களவையில் அ.தி.மு.க உறுப்பினர்கள் குழு தலைவர் டாக்டர் மைத்ரேயன் எழுப்பியிருந்த கேள்விக்கு வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே. சிங் அளித்த பதில் வருமாறு:

இலங்கை உள்நாட்டு போருக்குப் பிறகு, “போருக்கு பிந்தைய படிப்பினை மற்றும் நல்லிணக்கக்குழு (எல்எல்ஆர்சி) அளித்துள்ள பரிந்துரையின் படி பாதிக்கப்பட்டவடக்கு மாகாண மக்களுக்கு நிவாரணம், போரின்போது காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கை, மக்கள் வசிப்பிடங்களில் நிறுத்தப்பட்ட படைகளை விலக்குதல், உயர்பாதுகாப்பு வலயத்தின் எல்லையை குறைத்தல், சந்தேகத்தின் பேரில் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவித்தல், இலங்கையில் தமிழர் வாழும் பகுதியில் அதிகாரப்பகிர்வு தொடர்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்தையில் ஈடுபடுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இலங்கை அரசை இந்தியா தொடர்ந்து வலியுறுத்திவருகிறது.

இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்சவிடம், இதை பிரதமர் நரேந்திரமோடி கடந்த 11ம் தேதி நேரில் வலியுறுத்தினார். இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டபகுதிகளில் வீட்டுவசதி, கண்ணிவெடி அகற்றுதல், கல்வி, வாழ் வாதாரம், தொலைத் தொடர்பு, சாலைவசதி, பொருளாதார புனரமைப்பு உள்ளிட்ட நலத்திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றுக்கு இந்தியா நிதி உதவி அளித்துவருகிறது.

அதைத்தொடர்ந்து வழங்குவதிலும் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இதன்விளைவாக போரினால் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளில் இயல்புநிலை மெல்ல திரும்பி கொண்டிருக்கிறது’ என விகே. சிங் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.