மகரிஷி பாரத்வாஜரால் நமக்கு வழங்கப்பட்ட பொக்கிஷமான வைமானிக சாஸ்த்ரா என்னும் நூல் அவருடைய ‘யந்திர சர்வாசா’ என்னும் நூலின் ஒரு பாகமேயாகும்! யந்திர சர்வாசா என்னும் நூல் பல வகைப் பொறிகளை உருவாகும் முறைகளைப் பற்றி விளக்கும் நூலாகும் ( DESIGN OF THE MACHINES). இதில் வைமானிக சாஸ்த்ரா விமானங்கள் உருவாக்கத்தைப் பற்றி மட்டும் விளக்குகிறது!!

இந்த நூலில் மூவாயிரம் சுலோகங்களில் பல வேறு வகையான விமானங்களின் உருவாக்கம் கட்டமைப்பு மற்றும் இயக்கும் முறைகள் சொல்லப் பட்டுள்ளன!! இந்த நூலைப் படிப்போருக்கு நமது புராண இதிகாசங்களில் சொல்லப்படும் புஷ்பக விமானம் போன்றவை எல்லாம் கட்டுக்கதை அல்ல என்பது புரிய வரும்! பரத்வாஜர் தம் நூலில் சகுண விமானம், ருக்ம விமானம், சுந்தர விமானம், திரிபுர விமானம் போன்ற பல்வேறு வகையான விமானங்களைப் பற்றிய தொழில்நுட்பங்களைப் பற்றிக் கூறியுள்ளார்!! அது மட்டுமல்ல பிற்காலங்களில் (அதாவது நம் காலத்தில்!) வரக்கூடிய விமானங்கள் பற்றியும் கணித்துச் சொல்லியுள்ளார்!! அதில் பிற்கால விமானங்கள் அதிகம் பேரை ஏற்றிச் செல்லும் வகையில் இருந்தாலும் அதிக எடையும் , அதிகமான எரிபொருளும் தேவைப்படுபவையாக இருக்கும் என்றும் சொல்லியுள்ளார்!! ( HE TELLS THAT THE FUTURE AEROPLANES WILL BE INFERIOR TO THAT OF HIS TIME IN MANY ASPECTS)

இன்றைய விமானங்களில் கூட இல்லாத பல நவீனமான முறைகள் பற்றி வைமானிக சாஸ்த்ரத்தில் சொல்லப் பட்டுள்ளது!! இந்நூலில் பொதுவாக சொல்லப்பட்ட விஷயங்கள் :

1. விமானங்கள் கட்டமைப்பு மற்றும் இயக்கம்
2. விமானங்களை ஒரே இடத்தில் நிற்க வைக்கும் முறை
3. எதிரி விமானங்களின் ராடார் பார்வையில் படாமல் மறைக்கும் முறை
4. எதிரி விமானங்களில் உள்ளவர்கள் புகைப்படம் மற்றும் அவர் தம் பேச்சுக்களை அறியும் வழிமுறைகள்
5. ஆபத்துக் காலங்களில் விமானத்தை செலுத்த வேண்டிய வழிமுறைகள்
6. எதிரி விமானங்களைத் தாக்கி அழிக்கும் வழிமுறைகள்

விமானக் கட்டமைப்பு என்பது ஏதோ பொம்மை விமானம் செய்வது போலன்றி விமானத்தின் பல்வேறு பொறிகள் பற்றியும் ( விமானம் மேலெழும்ப மற்றும் தரையிறங்க வைக்கும் பொறிகள், விமானத்தைத் திருப்ப உபயோகிக்கும் பொறிகள், விமானத்தின் வேகத்தைக் கூட்ட மற்றும் குறைக்கும் பொறிகள் மற்றும் ஆபத்துக் காலங்களில் விமானத்தை பாதுகாப்பாகத் தரையிறக்கும் குறைகள் இப்படிப் பல விஷயங்கள் உள்ளன!)

இது பற்றி இன்றைய விமானப் பொறியியல் துறையில் உள்ளவர்களின் கருத்துப் பற்றியும் அது உண்மையா என்பது பற்றியும் வரும் பதிவுகளில் காண்போம்!!!

தொடரும்,,,,,,

நன்றி #TREASURES_OF_HINDUISM
#Dhrona_charya

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.