மகரிஷி பரத்வாஜர் எழுதிய வைமானிக சாஸ்த்ரா நூல் பற்றியும் அதில் உள்ள பல வகையான விமானங்கள் பற்றியும் முந்தைய பதிவுகளில் சொல்லியிருந்தேன்!! பொதுவாகவே நமது ஹிந்து மத புராணங்கள் இதிகாசங்களில் சொல்லப்படும் ஆயுதங்கள், விமானங்கள் மற்றும் கடவுளர் பற்றிய வர்ணணைகள் எல்லாமே கட்டுக்கதை என்றுதான் நமது மத மக்கள் பலருமே நம்புகின்றனர்!!

ஒரு பொறியாளர் என்னும் முறையில் எனக்கும் அந்த விதமான சந்தேகங்கள்தான் இருந்தது!! இது பற்றி உலகளாவிய அளவில் சொல்லப்படும் கருத்துக்களைக் காண்போம் !!

மேலை நாட்டு விமானத் தொழில்நுட்ப அறிஞர்கள், விஞ்ஞானிகள் மற்றும் நிறுவனங்கள் பலவும் இதையெல்லாம் கட்டுக்கதை என்றே சொல்கின்றன!!! இப்படிக் கட்டுக்கதை எனச் சொல்லும் பலரும் ஆனால் அதில் ஏன் தொடர்ந்த ஆய்வுகளை மேற்கொள்கின்றனர் என்பதுதான் புதிரான விஷயமாக உள்ளது!!!

நமது நாட்டு அரசு விமானத் தயாரிப்பு நிறுவனமான இன்னமும் வெற்றிகரமாக ஒரு இலகு ரக விமானத்தைக் கூட தயாரிக்க முடியாமலும் இருக்கும் ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம் இது பற்றிச் சொல்லும் கருத்தும் இதையொட்டியே அமைந்துள்ளது!!! இவை எல்லாம் விமானவியல் தொழில்நுட்பத்தில் ஏற்புடைய விஷயம் அல்ல!! இவை டிசைன் அடிப்படையில் ஒத்துவராத விஷயம்!! இவருடைய விமான விளக்கங்களில் ‘ருக்ம விமானம்’ மட்டும் ஓரளவு நடைமுறையில் ஒத்து வரும் என்று தோன்றுகிறது!! அப்படியும் இவர் விமான அளவுகளில் கொடுத்துள்ளபடி விமானம் தயாரிக்க இயலாது!! மற்றும் இவருடைய கோட்பாடுகள் பலவும் நியூட்டன் விதிகளை மீறுகின்றன!! அதனால் இதெல்லாம் கட்டுக்கதைதான் என்று தன் மேதாவிலாசத்தைக் காட்டியுள்ளது இந்நிறுவனம்!!!

ஆனால் வைமானிக சாஸ்த்ரா கட்டுக்கதையா அதில் சொல்லப்பட்டுள்ள தொழில்நுட்ப விஷயங்கள் எல்லாமே கற்பனையா என்பது பற்றிய செய்முறை நிஜ நிரூபணம் ஒன்றை வரும் பதிவுகளில் காண்போம் !!!

தொடரும்,,,,,,

நன்றி #TREASURES_OF_HINDUISM
#Dhrona_charya

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.