எபோலா காய்ச்சல் உலகம்முழுவதும் பரவக்கூடும் என்று உலகசுகாதார நிறுவனம் நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து, துரிதமாக செயல்பட்ட மத்திய சுகாதார அமைச்சகம் 24 மணிநேர அவசர உதவி மையத்தை அமைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த உதவி மையத்தின் அவசர அழைப்புதொலைபேசி எண்கள் ‘011-23061469, 3205 மற்றும் 1302’ என்று அறிவித்த மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன், ‘எபோலா காய்ச்சல் பற்றி மக்கள் பீதியடைய தேவையில்லை. இதுதொடர்பாக, தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

எபோலா அறிகுறிகளால் பாதிக்கப்படும் டில்லி வாசிகளுக்கு சிகிச்சை அளிக்க டில்லியில் உள்ள ராம்மனோகர் லோகியா மருத்துவமனை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது’ எபோலா நோயின்தாக்கம் தொடர்பாக கண்காணித்து, உஷார் நிலையில் இருக்கும்படி அனைத்து மாநில அரசுகளின் தலைமை செயலாளர்களுக்கும் அறியுருத்தப்பட்டுள்ளது, எபோலா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நாடுகளில் வசித்துவரும் சுமார் 47 ஆயிரம் இந்தியர்களை அங்குள்ள இந்திய தூதரகம் தொடர்புகொண்டு, இந்நோய்க்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார் .
.

எபோலா காய்ச்சலால் ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா, லைபீரியா, சியானா, சையர் லியோன் ஆகிய 4 நாடுகளில் தற்போது மிகவேகமாக பரவி வருகிறது. இந்தகாய்ச்சலுக்கு இதுவரை சுமார் ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். எபோலா காய்ச்சல் அறிகுறிகளுடன் ஆயிரக்கணக்கானவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர். எபோலா நோய் தாக்கியவர்களுக்கு கடும் காய்ச்சல், கட்டுக்கடங்காத ரத்தக்கசிவு போன்ற அறிகுறிகள் தெரியும்.

இது குறித்து உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் மார்கரெட்சான் கூறுகையில், கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும்மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வரும் எபோலா வைரஸ் தொற்றுநோயால் மக்கள் உயிரிழக்கிறார்கள்.இந்த நோயால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு சர்வதேச உதவிகள் தேவையாக இருப்பதாக கூறியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.