இந்தியர்களை ஒருங்கிணைக்கும் வாழ்க்கை முறை தான் இந்துத்துவா என ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

ஒடிஷாவின் கட்டாக்கில் ஒடியாமொழி வார இதழின் பொன்விழா நிகழ்ச்சியில் மோகன்பகவத் பேசியதாவது: இங்கிலாந்தில் வாழ்பவர்களை ஆங்கிலேயர்கள் என்கிறோம்.. ஜெர்மனில் வாழ்பவர் களை ஜெர்மானியர்கள் என்கிறோம்.. அமெரிக்காவில் வாழ்பவர்களை அமெரிக்கர்கள் என்கிறோம்.

ஆனால் இந்த இந்துஸ் தானில் வாழ்பவர்களை ஏன் இந்துக்கள் என அழைப்பதில்லை? கலாச்சார அடிப்படையில் இந்துத்துவா என்ற பெயராலேயே இந்தியர்கள் அடையாளம் காணப் படுகின்றனர். இந்துத்துவா என்பது வாழ்க்கைமுறை. இந்துக்கள் என கூறப்படுபவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக வேண்டுமானாலும் இருக்கலாம்; எந்தகடவுளை வேண்டுமானாலும் வழிபடலாம். கடவுள்வழிபாட்டில் நம்பிக்கை இல்லாதவர்களாககூட இருக்கலாம்.

விவேகானந்தர் கூறியதை போன்று கடவுளை வழி படாதவன் நாத்திகவாதி அல்ல; சுயநம்பிக்கை இல்லாதவனே உண்மையான நாத்திகவாதி. ஆதி காலம் முதல் எத்தனை வேறுபாடுகள் இருந்தாலும் இந்தியர்களை ஒருங்கிணைத்திருப்பது இந்துத்துவா மட்டும்தான் என உலகம் தற்போது உணர்ந்து கொண்டுள்ளது.

ஆனால் இந்தியாவில் உள்ள சிலர்மட்டும் அதனை புரிந்து கொள்ளாமலும், தவறாக புரிந்துகொண்டும் மத பேதங்களை ஏற்படுத்துகின்றனர். உலகெங்கும் இருள் சூழ்ந்திருக்கிறது. அந்தஇருளில் இருந்து விடுபடுவதற்கான தீர்வும் ஆறுதலும் இந்தியாவில்தான் உள்ளது என உலகம் உணர்ந்துகொள்ள துவங்கியுள்ளது. ஏனெனில் இன்றுவரை இந்தியா வாழ்க்கை நெறிகளின் அடிப்படையிலும். கலாச்சார அடிப்படையிலும் சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது; அந்த வாழ்க்கைதர்மத்தை அனைவரும் புரிந்துகொண்டால் உலகம் தொடர்ந்து இந்தியாவை மதிக்கும். ஆனால் அந்த தர்மம் இந்நாட்டை விட்டு சென்றுவிட்டால் இந்த நாடு பிளவுபட்டு அழிவதை உலகில் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. இவ்வாறு மோகன் பகவத் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.