ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருபகுதிதான் என்று சந்திரசேகர் ராவ் மகளும், டிஆர்எஸ். எம்.பியுமான கவிதா லோக் சபாவில் கூறியுள்ளார்.

நிஜாமாபாத் தொகுதி எம்.பியான கவிதா, அண்மையில் அளித்தபேட்டி ஒன்றில், ஜம்மு காஷ்மீரும், ஹைதராபாத்தும் இந்தியாவின் அங்கமாக சுதந்திரத்திற்கு முன்பு இருந்ததில்லை என்றும், அவை கட்டாயப்படுத்தி இந்தியாவுடன் இணைக்கப்பட்டதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில், பா.ஜ.க.,வைச் சேர்ந்த வக்கீல் கருணா சாகர் என்பவர் ஹைதராபாத்தில் உள்ள 7வது கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் கவிதாமீது வழக்குதொடர்ந்தார். அதில் அவர், காஷ்மீரில் சர்வதேச எல்லைகளை மாற்றி அமைக்கவேண்டும் என்றும் கவிதா கூறியுள்ளார்.

அவரது கருத்து, தேச துரோகம் ஆகும். தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும். ஆகவே, அவர் மீது கிரிமினல்வழக்கு பதிவுசெய்யுமாறு போலீசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்தமனு, நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்தபுகாரை மத்தனாபேட்டை போலீசுக்கு அனுப்ப உத்தரவிட்ட மாஜிஸ்திரேட்டு, புகாரைவிசாரித்து, வழக்கு பதிவுசெய்யுமாறும், விசாரணை நிலவர அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறும் கூறினார்.

இதைப்பற்றி கேட்டபோது, மத்தனாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கே.பி.வி.ராஜு, நீதிமன்ற உத்தரவு நகல் கிடைத்தபிறகு, வழக்கு பதிவு செய்யப்படும் என்று கூறினார். அதன்படி, தேசநலனுக்கு எதிராக கருத்து கூறியதாக, நேற்று மாலை கவிதா மீது, 123ஏ, 153பி, 505 ஆகிய பிரிவுகளின் கீழ், ஜாமீனில் வெளிவர முடியாத வழக்கு பதிவுசெய்யப்பட்டது. அவர் மீது முதல்தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் இந்தக் கருத்துக்காக பகிரங்க மன்னிப்புக்கேட்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது. இதனிடையே லோக்சபாவில் நேற்று பேசிய கவிதா, ஜம்முகாஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதிதான் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.