தனக்கிருக்கும் மக்களின் ஆதரவு தளத்தை இழக்க எந்த ஒரு அரசியல் வாதியும் விரும்ப மாட்டார். இதில் பாரத பிரதமர் நரேந்திர மோடியும் விதிவிளக்கல்ல. தன் மீது நம்பிக்கை கொண்ட கோடான கோடி மக்களின் குறிப்பாக இளைஙர்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்த அமித் ஷாவை பாஜக.,வின் தேசிய தலைவராக ஆக்கி அடித்தளம் அமைத்திருக்கிறார் என்றே கூறவேண்டும்.

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை மட்டும் அல்ல தனிப் பெரும்பன்மையுடன் ஆட்சி அமைத்திருக்கிறது பாஜக. இது காங்கிரசின் மீதான அதிருப்தியால் மட்டும் அல்ல நரேந்திர மோடியின் மீது மக்கள் கொண்ட அதீத நம்பிக்கையின் காரணமாகவே சாத்தியமானது. இருப்பினும் அறுபது வருட காங்கிரஸ் அரசின் அவலங்களை எல்லாம் கண்டும் காணாமல் மேம்போக்காக இருந்தவர்கள். காங்கிரஸ்சுடன் கூட்டணி என்ற வடிவத்தில் இணைந்து அட்டூழியங்கள் பல புரிந்தவர்கள் எல்லாம் அறுபது நாள் மோடி அரசை விமர்சிக்கிறார்கள்.

மோடி அறுபது நாளில் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் ஒரு மந்திரவாதியும் அல்ல அதே நேரத்தில் அவர் ஒரு சிறந்த நிர்வாகியும் கூட என்பதை வாக்களித்த அனைவரும் அறிவர். இன்று இந்தியாவின் மீதான உலகின் பார்வை மாறியுள்ளது அண்டை நாடுகளாக இருந்த போதிலும் இந்தியாவை அந்நியனாகவே பார்த்த எல்லை நாடுகள் எல்லாம் இன்று இந்தியாவின் மீதான தங்கள் பார்வையை மாற்றியுள்ளது.

ஆட்சி மாறினாலும் அதிகார வர்கத்தின் அவல நிர்வாகமும், ஊழலும் மாறுவதே இல்லை. ஒரு சிறந்த அரசுக்கு அடித்தளமாக இருக்கும் அதிகார வர்க்கத்தினை சீர்திருத்தும் விதமாக 19 அம்ச திட்டங்களை வெளியிட்டுள்ளார். நிர்வாக முடிவு தொடர்பான கோப்புகள் மூன்று மேஜைகளை தாண்டக்கூடாது. உறவினர்கள் யாரையும் உதவியாளர்களாக நியமிக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அமைச்சர்களுக்கு விதித்துள்ளார்.

இந்திய விவசாயத்துக்கு அடித்தளமாக இருக்க போகும் நதிகள் இணைப்புக்கும் , இந்திய பொருளாதாரத்துக்கு அடித்தளமாக இருக்க போகும் தங்க நாற்கரம் , வைர நாற்கரம் உள்ளிட்ட திட்டங்களுக்கும் 60 நாட்களுக்குள் உயிர் தந்துள்ளார். அதாவது 60 வது வருட காங்கிரஸ் அரசால் வலுவிழந்துள்ள தேசத்தின் அடித்தளங்களை வலுப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் 60 பது நாட்களுக்குள் எடுத்துள்ளார்.

இருப்பினும் மக்களின் ஆதரவை தக்கவைத்துக் கொள்ள ஆட்சியில் மட்டும் அல்ல கட்சியிலும் சிறந்த நிர்வாகம் தேவை, மேலும் வரவிருக்கும் மகாராஷ்டிரா , ஜம்மு காஷ்மீர் , ஜாட்கன்ட், ஹரியாணா, டெல்லி சட்டசபை தேர்தல் வெற்றி தோல்வி மத்திய அரசின்மீது மாபெரும் தாக்கத்தை உண்டுபண்ணும். எனவே ஆட்சியும், கட்சியும் ஒரே திசையில் செல்ல வேண்டியது காலத்தின் கட்டாயம். அமித்ஷா போன்ற மாபெரும் சிறந்த நிர்வாகிகளால் இது நிச்சயம் சாத்தியமே.

தமிழ் தாமரை VM வெங்கடேஸ்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.