யோகா குரு பிகேஎஸ் ஐயங்கார் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 96 வயதுடைய யோகாகுரு ஐயங்கார் இதய மற்றும் சுவாசகோளாறு காரணமாக கடந்த செவ்வாய்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனைதொடர்ந்து இன்று அதிகாலை அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சர்வதேச அளவில் புகழ்பெற்ற யோகா குரு பிகேஎஸ் ஐயங்கார்,1991 ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது மற்றும் 2002 ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருதையும் இந்த ஆண்டு தொடக்கத்தில் பத்மவிபூஷன் விருதையும் பெற்றார். யோகாகலை பற்றி ஏராளமான புத்தகங்களையும் அவர் எழுதியுள்ளார்.

பிகே எஸ் ஐயங்கார் மறைவுக்கு பிரதமர் நரேந்திரமோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.” யோகாச் சார்யா பிகேஎஸ் ஐயங்கார் மரணம் அடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு தான் ஆழ்ந்தவருத்தம் அடைந்தேன். உலகம்முழுவதும் உள்ள அவரது ஆதரவாளர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்

Tags:

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.