மாசுபட்டுள்ள கங்கை நதிக்கு புத்துயிரளிக்கும் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு மூன்று ஆண்டுகள் இலக்கு நிர்ணயித் துள்ளது.

இது தொடர்பாக மத்திய நீர் வளம், நதிகள் மேம்பாடு மற்றும் கங்கை புத்துணர்வுதுறை அமைச்சர் உமாபாரதி நிருபர்களிடம் கூறியதாவது:-

தொழிற்சாலை கழிவுநீர் மற்றும் சாக்கடையால் மாசடைந்துள்ள கங்கையை 3 ஆண்டுகளில் சுத்தம்செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தமூன்று ஆண்டுகளில், சுற்றுச்சூழல் ஓட்டத்தை நிறுவ உள்ளோம். 6 மாதங்களில் சுத்தம்செய்யும் திட்டங்கள் தொடங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இதேபோல் டெல்லியில்பாயும் யமுனை நதியையும் சுத்தம்செய்வது தொடர்பாக டெல்லி துணை நிலை ஆளுநரை சந்தித்து ஆலோசனை நடத்தினேன். இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் எங்களை சந்தித்து இதுபற்றி பேச உள்ளனர். 2015-16ஆம் ஆண்டை தண்ணீர் பாதுகாப்பு ஆண்டாக அறிவிக்க திட்டமிட்டிருக்கிறோம். சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்தவும் தயாராக இருக்கிறோம இவ்வாறு அவர் கூறி

Tags:

Leave a Reply