ஹிந்து என்பது மதக் கோட்பாடு அல்ல. அது கலாசாரத்தின் அடையாளம் என மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.

இந்தியா ஹிந்து நாடு, ஹிந்துத்வா என்பது அதன் அடையாளம் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், அண்மையில் கூறிய கருத்துக்கு பலர் தேவையில்லாத சர்ச்சையை கிளப்பினர்.

இந்நிலையில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு இந்து என்ற வார்த்தைக்கு பல்வேறு அர்த்தங்களை தெரிவித்து சர்ச்சையை எழுப்பும் முயற்சிக்கு கடும்கண்டனம் தெரிவித்துள்ளார் அவர் இந்து என்பது ஒரு மதம் மட்டுமல்ல; அது ஒருகலாச்சார அடையாளம் என்று கூறினார்.

இதுபற்றி சி.எஸ்.ஐ.ஆர் (இந்திய கெமிக்கல் டெக்னாலஜி கல்வி நிறுவனம்) 70-வது ஆண்டு விழாவில் வெங்கையா நாயுடு பேசியதாவது:-

இந்து ஒருமதம் மட்டும்தான் என்றால், பிறகு எப்படி இங்கு இந்து நாளிதழ் இருக்கிறது? இந்துஸ்தான் டைம்ஸ் செய்தித் தாள் இருக்கிறது? ஏன் இந்தியின் அக்பர் இந்துஸ்தான் இருக்கிறது? எப்படி எச்.எம்.டி (இந்துஸ்தான் மெசின் டூல்ஸ், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் இருக்கிறது? இந்துஸ்தான் கப்பல்தளம் எப்படி இங்கு இருக்கிறது?

இப்படி 125 உதாரணங்களை நான் சொல்லமுடியும். இது நானோ அல்லது பிரதமர் நரேந்திர மோடியோ அல்லது யாரோ சொல்லிய உதாரணங்கள் அல்ல . இதெல்லாம் பாரம்பரியமாகவே இருக்கிறது. ஆகஸ்ட் 15 அன்று நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? ஜெய்ஹிந்த் என்றுதானே! இந்தியா எல்லோருக்கும் அடைக்கலம் அளித்திருக்கிறது. எல்லா மதத்தினருக்கும் இடம் கொடுத்திருக்கிறது. இங்கு எல்லோரும் சுதந்திரமாக வருகிறார்கள் இந்தியா ஒருஅருமையான கலாச்சாரத்தை கொண்டுள்ளது. ஆனால், சிலர் இந்த வார்த்தையை வைத்துக் கொண்டு சர்ச்சையை கிளப்ப பார்க்கிறார்கள். இந்து என்பது இந்திய கலாச்சாரத்தில் வேரூன்றி இருக்கிறது என்று அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.