பயங்கர வாதிகளுக்கு பயிற்சி அளித்து வெளிநாடுகளுக்கு அனுப்பும் அளவிற்கு தமிழகத்தின் சட்ட ஒழுங்கு நிலை இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் முன்னாள் துணை பிரதமர் அத்வானி ரத யாத்திரையின் போது வைக்கப்பட்ட பைப் வெடி குண்டிலிருந்து, திருவள்ளூர் கிழக்கு மாவட்டத் தலைவர் பாடி சுரேஷ்குமார் படுகொலை வரை முஸ்லீம் பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட படு கொலைகள், பயங்கரவாத செயல்கள் குறித்து விரைந்துவிசாரிக்க தனி நீதிமன்றத்தை ஏற்படுத்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளதை இந்துமுன்னணி வரவேற்கிறது, பாராட்டுகிறது.

இதுவரையில் நடைபெற்ற அனைத்து படு கொலைகளிலும், முஸ்லீம் பயங்கரவாத செயல்களிலும் கூட குற்றவாளிகள் முழுமையாக தண்டிக்கப்படவில்லை. 20 ஆண்டுகளாக தேடப்பட்ட குற்றவாளிகள் தற்போது கைதுசெய்யப் பட்டுள்ளார்கள். அப்படியானால் அந்த வழக்குகள் இன்னமும் முடியவில்லை என்பது இதிலிருந்து புலானாகிறது.

ஜாமீனில் வெளிவந்த முஸ்லீம் பயங்கரவாதிகள் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள், அல்லது தலைமறைவாகி வெளிநாடுகளுக்குத் தப்பித்துச் செல்கிறார்கள் என்பதை நீதிமன்றமும், காவல்துறையும் கவனத்தில் கொள்ள இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

கடந்த மூன்று ஆண்டுகளில் முஸ்லீம் மத அடிப்படை வாதிகளின் ஆதரவு தளமும், பயங்கரவாதிகள் செயல்பாடுகள் முன்பைவிட அதிகளவில் பெருகியுள்ளன. பொது இடங்களில் முஸ்லீம்கள் வன்முறையை தூண்டி விடுவதை காவல் துறை கைகட்டி வேடிக்கைபார்க்கிறது. அதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. இத்தகைய நடவடிக்கைகளை மூடிமறைக்க படுகொலை செய்யப்பட்ட இந்து தலைவர்கள் மீது வீண்பழி சுமத்தி, திட்டமிட்ட கொலைக்கு நியாயம் கற்பிப்பது வேடிக்கையானது.

மத்திய, மாநில அரசுகள் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பை, ஆதரவு நடவடிக்கைகளை தடைசெய்ய வேண்டும். நமது நாட்டிற்கு எதிராகவும், நமது இறையாண்மைக்கு எதிராகவும் அதன் நடவடிக்கைகள் இருக்கின்றன. அப்படியிருக்கையில் அதற்கு ஆதரவாளர்களை திரட்டுவது, அங்கு நடக்கும் பிரச்னைக்கு இங்கிருந்து ஆட்களை அனுப்புவதை அரசு கண்காணித்து தடுக்கவேண்டும்.

இங்கிருந்து ஈராக் நாட்டிற்கு முஸ்லீம் மதத்தைச்சேர்ந்த இரு பிரிவினர் நூற்றுக்கணக்கானவர்கள் சென்றுள்ளனர் என்பது கவலை தருகிறது . பயங்கரவாதத்திற்கு பயிற்சி அளித்து வெளிநாடுகளுக்கு அனுப்பும் அளவிற்கு தமிழகத்தின் சட்ட ஒழுங்கு நிலை இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். முஸ்லீம் பயங்கரவாதிகளுக்கு துணை போகிறவர்கள், பாதுகாப்பு கொடுப்பவர்கள், நிதி உதவிசெய்பவர்கள், விசாரணைக்கு இடையூறு விளைவிக்க குற்றவாளிகளுக்கு சாதகமாக பேசியும், குற்றத்தை நியாயப் படுத்தியும் திசை திருப்பும் முஸ்லீம் அமைப்புகள் மீதும் நடவடிக்கை எடுக்காமல் தமிழக அரசின் நடவடிக்கை முழுமைபெறாது, பலன் தராது என்பதை இந்துமுன்னணி தெரிவித்துக் கொள்கிறது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Tags:

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.