ஜம்மு-காஷ்மீர் பகுதியிலுள்ள போரால் பாதிக்கப்பட்ட அகதிகளின் பிரச்னைகளை குறிப்பிட்ட கால வரையறைக்குள் தீர்த்துவைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பாஜக தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க.,வின் தலைவராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக ஜம்மு-காஷ்மீரின் எல்லைப் பகுதி மாவட்டங்களில் அவர் திங்கள் கிழமை சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது ஆர்.எஸ்.புரா மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் அமித்ஷா கூறியதாவது:

இந்தியா-பாகிஸ் தான் இடையேயான 1947, 1965 மற்றும் 1971ஆம் ஆண்டு போர்களின்போது பாதிக்கப்பட்ட அகதிகளின் பிரச்னைகளை விரைவில் தீர்த்துவைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பாகிஸ்தான் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மக்களின் வலியை நாங்கள் உணர்ந்துள்ளோம்.

பாகிஸ்தானின் தாக்குதல்களுக்கு தக்கபதிலடி கொடுக்க பாதுகாப்பு படையினருக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உத்தரவிட்டுள்ளார். பாகிஸ்தான் தாக்குதல்களை பொறுத்துக்கொள்ள முடியாது.

ஜம்மு காஷ்மீரிலுள்ள போரால் பாதிக்கப்பட்டுள்ள அகதிகள் இலவச வீட்டு மனைகள் வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். மாநில அரசே வீட்டுமனைகளை வழங்கமுடியும்.

எனினும், மனம் தளர்ந்து விட வேண்டாம். ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா ஆட்சியின் நாள்கள் எண்ணப்பட்டு வருகின்றன. விரைவில் இங்கு நடை பெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை பெற்று, பாஜக தலைமையிலான புதிய அரசு மலரும்.

ஜம்மு காஷ்மீரை கடந்த 60 ஆண்டுகளாக ஆண்ட பல்வேறு அரசுகள், மாற்றாந் தாய் மனப் பான்மையுடன் செயல்பட்டு மக்களுக்கு பல்வேறு அநீதியை இழைத்துள்ளன. பா.ஜ.க ஆட்சிக்குவந்தவுடன் அவை சரி செய்யப்படும். ஜம்மு காஷ்மீர் உள்பட நாடுமுழுவதும் "காங்கிரஸ் அல்லாத இந்தியா'வை உருவாக்க பாஜக போராடி வருகிறது என்று அமித் ஷா கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.