நான்காம் அனுவாகம் : எம்மைச் சூழ்ந்து துன்புறுத்திக் கொல்லும் கெட்ட சக்தியாகவும் எமக்கு உதவி செய்யும் நல்ல சக்தியாகவும், கெட்ட சக்திகளை எல்லாம் அழிப்பவனாகவும் உள்ளவனுக்கு வணக்கங்கள்!! பிணைந்து இருப்பவனுக்கும் பிணைந்து இருப்பவருக்கெல்லாம் தலையாக

உள்ளவனுக்கும் பல விதமான மக்களின் சபையாக உள்ளவனுக்கும் அம்மாதிரி சபையின் தலைவனாக உள்ளவனுக்கும் , ஒரு குலத்தின் உறுப்பினராகவும் அக்குலத்தின் தலைவனாகவும் இருப்பவனுக்கும், அகோரமாகக் காட்சியைப்பவனும் உலகில் உள்ள எவரையும் போலக் காட்சியளிப்பவனும், மனிதனைப் போல பலகீனமானவனுக்கும் சிறந்த ஆத்மாவாக உள்ளவனுக்கும், தேரை ஒட்டி வருபவனுக்கும் தேரே இல்லாதவனுக்கும், தேராகவே உள்ளவனுக்கும் தேருக்குத் தலைவனாக உள்ளவனுக்கும், போர்வீரனாக உள்ளவனுக்கும் போர்வீரர்களின் தலைவனாக இருப்பவனுக்கும், தேரைச் செலுத்துபவனுக்கும் தேரை நிறுத்துபவனுக்கும், தேரைச் செய்யும் தச்சனாகவும் இருப்பவனுக்கும் , குயவனாகவும், கருமாராகவும், பறவைகளை வேட்டையாடுபவனாகவும், மீன் பிடிப்பவனாகவும், வில்லையும் அம்பையும் செய்பவனாகவும், மிருகங்களை வேட்டையாடுபவனாகவும், நாய்களைக் கயிற்றால் பிணைத்து வருபவனாகவும் , அதே நாயாகவும் நாய்களைக் காப்பவனாகவும் இருப்பவருக்கு வணக்கங்கள் வணக்கங்கள்!!!

ஐந்தாம் அனுவாகம் : துன்பங்களைக் கொடுப்பவனாகவும் துன்பங்களை எடுப்பவனாகவும், குற்றங்களை அழிப்பவனாகவும் அனைத்து உயிர்களுக்கும் இறைவனாகவும், சாம்பல் பூசிய நீலக் கழுத்தை உள்ளவனாகவும், ஜடாமுடி உள்ளவனாகவும் தலைமுடி இல்லாதவனாகவும், ஆயிரம் கண்களையும் ஆயிரம் அம்புகளையும் கொண்டவனாகவும், மலைகளின் அரசனாகவும் ஒளி பொருந்தியவனாகவும், மலை முகடுகளில் மழையாய்ப் பொழிபவனாகவும், சிறியவனாகவும் சித்திரக் குள்ளனாகவும், பெரும் உருவமுள்ளவனாகவும், நற்குணங்களின் பொக்கிஷமாகவும், வயோதிகனாகவும், பெருமைகள் படைத்தவனாகவும், படைப்புக்கு முந்தியவனாகவும் கடவுளரில் முதன்மையானவனாகவும், எங்குமிருப்பவனாகவும் வேகமாக நகர்பவனாகவும், சுழலாகவும் பெருநீராகவும், அலையாகவும் நிலையான நீராகவும், சிற்றாராகவும் நீர் நிரம்பிய தீவாகவும் இருப்பவனுக்கு வணக்கங்கள் வணக்கங்கள்!!

தொடரும்,,,,,,

நன்றி #TREASURES_OF_HINDUISM
#Dhrona_charya

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.