இந்த ஐந்து பதிவுகளில் வந்த ஸ்ரீருத்ரத்தின் பொருள் எதைக் குறிக்கிறது? இன்னொன்று இவற்றை சுருக்கமாக ஒரே பதிவில் சொல்லலாம் என்று நினைத்தவன் பின்பு ஒரு குறிப்பிட்ட காரணத்துக்காகவே ஐந்து பதிவுகளில் கொடுத்தேன்!! ஏனென்றால் நமது நண்பர்கள் யாராக இருந்தாலும் இது

போலப் பொருள் பற்றிப் பேசும்போது உடனே வேதம் என்ன சொல்கிறது, வேத விளக்கம் என்ன என்றெல்லாம் உடனே கச்சை கட்டிக் கொண்டு கிளம்புகின்றனர்!!! இப்போது இந்தப் பதிவுகளின் விளக்கம் உங்களுக்குப் புரிகிறதா??? இது ஒரு சிறு உதாரணம்!! அவ்வளவே!! இந்த இடத்தில் ஸ்தூலப் பொருள் சூட்சமப் பொருள் என்று முன்பொரு பதிவில் நான் கூறியதை நினைவுகூற விரும்புகிறேன்!! இந்த மந்திரங்களின் மேலோட்டமான பொருள்தான் இது!! அதாவது ஸ்தூலம்!! ஸ்தூலப் பொருள் வெறும் பட்டறிவின் காரணமாக பெறப்படுவது!!! இந்தப் பொருள் எதைக் குறிக்கிறது என்பது குறித்து சிந்தித்துக்கொண்டே இருந்தால் அதன் உண்மைப் பொருள் விளங்கும்!! அதுதான் சூட்சமம்!! சூட்சமப் பொருள் அதைப் பற்றி சிந்தித்துக் கொண்டே இருந்தால் வரும்!!! இப்பொது ருத்ரத்துக்கு வருவோம்!! இதன் பொருள் எதைக் குறிக்கிறது??

இது சுருக்கமாக பிரபஞ்சத்தில் உள்ள எல்லா இயக்கங்களும் ருத்ர சொரூபமே என்று ஒரே வரியில் சொல்லாமல் அவற்றை விளக்கமாக சொல்லி நிற்கின்றன!!! இன்னமும் ஒரு பொருளைப் பல வகைகளிலும் பகுத்து தொடர்புபடுத்த முடியும்!! அதையும் இந்த மந்திரங்கள் உணர்த்துகின்றன!!! உதாரணமாக தேர் என்கிற ஒன்றைக் கொள்ளுங்கள்!! தேர் உள்ளவனாக ஒருவன் இருக்கலாம்!! தேர் இல்லாதவனாக இன்னொருவன் இருக்கலாம்!! மூன்றாவது தேரோட்டியாக ஒருவன் இருக்கலாம்!! இன்னமும் தேர் என்பதாகவும் ஒருவன் இருக்கலாம்!! அப்புறம் தேரைச் செய்யும் தச்சனாகவும் ஒருவன் இருக்கலாம்!! இவை அனைத்தையும் ருத்ர ரூபமாக சொல்கிறது!!! தேர் உள்ளவனே, தேர் இல்லாதவனே, தேரை ஒட்டுகிறவனே, தேராகவே இருப்பவனே, தேர் செய்யும் தச்சனாகவும் உள்ளவனே என்று கூறுகிறது!!! இன்னமும் சூட்சம நிலையில் இதை சொல்ல முடியும்!!! தேரை வாழ்க்கையாக சித்தரித்தால் வாழ்க்கை உள்ளவனே, வாழ்க்கை இல்லாதவனே , வாழ்க்கையாகவே இருப்பவனே, வாழ்க்கையை செலுத்துபவனே, வாழ்க்கையை உருவாக்குபவனே இப்படியும் சொல்லலாம்!!!

இன்னமும் எதிர்மறை விளக்கங்களாக ‘எம்மைச் சூழ்ந்து துன்புறுத்திக் கொல்லும் கெட்ட சக்தியாகவும் எமக்கு நல்லது செய்யும் நல்ல சக்தியாகவும் இருப்பவனே’ என்பதைக் கவனிக்கவும்!!! இதிலிருந்து புரிந்துகொள்ள வேண்டியது அழிவுக் கடவுள் என்றால் அவனே மங்களங்களையும் தருபவன் என்பதுதான்!!! இது இன்னமும் சூட்சமமாக ஒரு பொருளை விளக்கி நிற்கிறது !! அது பின்வரும் பதிவுகளில் வரும் !!! இதே விளக்கத்தை தமோகுணம் குறித்து பலப்பல முறை என்னுடன் யுத்தம் நடத்துபவர்களும் புரிந்து கொள்ள வேண்டும்!!! புரிந்து கொள்ளவில்லை என்றால் அதற்கு மேல் என்னால் விளங்க வைக்க இயலாது!!!!!

இப்படியாக சூட்சம நிலைகளில் சிந்திப்பதால்தான் வேதத்தின் பொருள் விளங்குமேயன்றி வெறும் பொருள் கொண்டு வாதிடுவதால் அல்ல!!!!

தொடரும்,,,,,,

நன்றி #TREASURES_OF_HINDUISM
#Dhrona_charya

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.