தல்படே உருவாக்கிய நவீன உலகின் முதல்விமானம் பற்றிய மேலைநாட்டு விஞ்ஞானிகளின் கருத்துக்கள் குறித்து ஒருபொறியாளர் என்கிற முறையில் எனக்கும் சந்தேகம் தான் இருந்தது!! ஆனால் அது பற்றிய விபரங்களைப் படித்த போது அந்த சந்தேகம் நீங்கியது!!

ஏனென்றால் தல்படே விமானத்தை உருவாக்கிய 1895ம் ஆண்டில் விமான இஞ்சின்கள் தயாரிப்பில் மேலைநாடுகளே ஆராய்ச்சி அளவில்தான் இருந்துவந்தன!! விமான இஞ்சின்கள் WHITE PETROL எனப்படும் சுத்திகரிக்கப்பட்ட வெள்ளைபெட்ரோல் என்னும் எரிபொருளை அடிப்படையாக கொண்டவை!! அவ்வாறன இன்ஜினின் பாகங்கள் மிகநுணுக்கமான அளவுகளுடன் தயாரிக்கப்படுபவை!! மற்றும் மிகவும் அற்புதமான முடிவுநிலையில் ( PRECISION FINISH ) செய்யப்படுபவை!! தல்படே வெளிநாடு எங்கும் சென்ற தில்லை!! எந்த நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றவு மில்லை!! பின் எப்படி அவர் அம்மாதிரியான ஒரு இன்ஜினைத் தயார்செய்திருக்க முடியும் என்பதே என் சந்தேகம்!!!

ஆனால் தல்பாடேவின் விமானத்தில் இருந்த இஞ்சின் முற்றிலும் மாறுபட்டது!! தல்படேவின் நண்பரும் மும்பை பல்கலையில் வரை வாளராகப் பணியாற்றிய திரு.சுப்பராய சாஸ்திரி அவர்கள் மகரிஷி பரத்வாஜரின் 'வைமானிக சாஸ்த்ரா' புத்தகத்தை ஆராய்ந்து அதன் சுலோகங்களுக் கான பொருளை தல்படேவுடன் இணைந்து கண்டறிந்தார்!! அதேபோல சாஸ்திரி அவர்கள் பரத்வாஜர் தந்திருந்த அந்தக்கால அளவுகளை எல்லாம் இக்காலத் து அளவுகளில் மாற்றி மகரிஷி சொல்லியிருந்த விமானங்களின் வரை படத்தையும் தயாரித்தார்!!! அவ்வாறு தயாரித்த வரைபடங்களை அடிப்படையாகவைத்தே தல்படே தன்னுடைய விமானத்தை உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது!!!

தல்படே யின் விமானம் இன்றைய விமானங்களை  போலன்றி பெட்ரோலை எரிபொருளாகக் கொள்ளாமல் பாதரசத்தை எரிபொருளாக கொண்ட மெர்குரிவெர்டக்ஸ் இஞ்சின் (MERCURY VORTEX ENGINE) என்னும் ஒருநவீனமான இஞ்சினை கொண்டிருந்தது!!! அந்த இஞ்சின் பற்றியும் அதனடிப்படையில் உருவாக்கப்பட்ட விமானத்தை தல்படே வெற்றிகரமாக வெள்ளோட்டம் விட்டது பற்றியும் அடுத்த பதிவில் சொல்கிறேன்!!!

தொடரும்,,,,,,

நன்றி #TREASURES_OF_HINDUISM
#Dhrona_charya

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.