மாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்தியா, சீனா இடையேயான 2வது முறைசாரா சாதிப்பு, பல்லாண்டு எல்லை பிரச்சனைகளையும், வரலாற்று வடுக்களையும் புறந்தள்ளி , இரு நாடுகளும் பரஸ்பரம் நல்லெண்ணெத்தையும், நம்பிக்கையையும் பெற முயற்சித்திருப்பது, உலக நாடுகளின் பாராட்டுகளையும்,  ஒரு நல்ல முன்னுதாரத்தையும் ஒருங்கே தந்துள்ளது.

இன்று உலகில் எல்லை பிரச்சனைகள் இல்லாத நாடுகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். இருப்பினும் எல்லைகள் மருவறைகள் என்பது இனி ஆபத்தான ஒன்றே. அதையும் மீறி எந்த் ஒரு நாடும் மருவரையறைக்குள் செல்லுமே ஆனால், அதனால் அது பெறப்போகும் நிலங்களை விட, பிணங்களின் எண்ணிக்கையே மேலோங்கும்.

குறிப்பாக இந்திய விவாகரத்தில் இதை  சீனா உணர்ந்தே உள்ளது. இது பண்டிட் ஜவகர்லால் நேருவின் இந்தியா அல்ல, பல்லவ கால வீர இந்தியாவும், நரேந்திர மோடி கால புதிய இந்தியவும் கலந்த ஒன்று. இங்கே 1962ம் ஆண்டைய  சூழல் இல்லை. தற்போது சீனாவை ஒட்டிய இந்திய எல்லைகள் எங்கும் இராணுவ தளவாடங்களை விரைவாக கொண்டு செல்ல கான்கிரீட் சாலைகள், சீனாவை நோக்கி பீரங்கி மற்றும் வலிமையான ஏவுகணை அணிவகுப்புகள்,பல புதிய போர் விமான தளங்கள் என்று வலிமைபெற்ற இந்தியாவாக உருவெடுத்துள்ளது . இதை சீனா நான்கே உணர்ந்ததால் தான்,  பூடானின் டோக்லாமில் கூட தனது பிடிவாதத்தை தளர்த்தியது.

 

இறுதியில் பரஸ்பர நம்பகத் தன்மையால் மட்டுமே இந்தியாவை வெல்ல முடியும் என்கிற பாரத பிரதமர் நரேந்திர மோடியின் ராஜதந்திரதுக்கும் இறங்கி வந்தது. இதன் பிரதிபலிப்பே சீனாவின் உகானில் நடைபெற்ற முதல் முறைசாரா சந்திப்பும், மாமல்லபுரத்தில் தற்போது நடைபெற்றுள்ள இரண்டாவது முறைசாரா சந்திப்பும்   ஆகும். மாமல்லபுரம் முறைசாரா சந்திப்பு இந்தியாவுக்கு மாபெரும் வெற்றி என்றே கூற வேண்டும்.

காஸ்மீர் விவகாரத்தில் பகிஸ்தானுக்கு ஆதரவாக, முன்றாம் நாடுகளின் தலையீட்டை  வழியுறுத்தி  ஐநா சபை வரைசென்ற சீன,  தற்போது சம்மந்த பட்ட இரண்டு நாடுகளும் பேசி தீர்வு காணவேண்டும் என்று கூறி தனது பிடியை கொஞ்சம் தளர்த்தியுள்ளது,  மேலும் முதல் முறையாக   இரண்டு நட்டு மக்களிடத்திலும் நல்லெண்ணம் விதைக்கபட்டுள்ளது. இரு நாட்டு ஊடகங்களும் நேர்மறை கருத்துக்களை பதிவிட்டுள்ளது.

இந்தியாவுக்குள் சீன பொருட்களின் மித மிஞ்சிய  இறக்குமதியும், இதனால் உருவாகியுள்ள 3 லட்சம் கோடி வரையிலான  வர்த்தக பற்றாக் குறையும், நாட்டின் பொருளாதாரத்தை சிதைத்து வந்தது. தற்போது இந்த விவாகரத்தில் பேசி தீர்வு கான்பது என்று முடிவெடுக்கப் பட்டுள்ளது இது மற்றொரு வெற்றி.

இல்லாவிடில் இறக்குமதியை கட்டுப் படுத்த இந்தியா ஒரு வரியை போட , அதற்கு பதிலடியாக சீனா ஒரு கூடுதல் வரியை போட. இது அப்படியே எல்லையில் எதிரொலிக்க, இரண்டு நாட்டு இராணுவமும் முட்டிக்கொள்ள இது மேலும் ஒரு பிரச்னையாக உருவெடுத்திருக்கும்.

”எந்த ஒரு சிறு கருத்து வேறுபாடும், எதிர் காலத்தில் பெரும் பிரச்சனையாக உருவெடுக்க அனுமதிக்க மாட்டோம்” என்கிற இரு தரப்பின் அறிக்கையே கூறுகிறது, நட்பு ஒன்றே தீர்வு என்று…..

நன்றி தமிழ் தாமரை வி.எம் வெங்கடேஷ் 

Comments are closed.