பிரதமர் நரேந்திர மோடி அறிவிப் பின்படி, தொடங்கப்பட்ட 'ஜன் தன் யோஜனா' திட்டத்தின் கீழ் இதுவரை 8 கோடி மக்களுக்கு வங்கிக்கணக்கு துவங்கி இலக்கைத் தாண்டி வெற்றிகரமாக பயணத்தை தொடர்கிறது.

ஜன்தன் திட்டம் அல்லது பிரதமர் மக்கள் நிதி திட்டம் என்ற பெயரில் வீட்டுக்கு ஒரு வங்கிக் கணக்கு இருக்கும் வகையிலான புதியதிட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி 28-8-2014 அன்று புது டெல்லியில் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் கீழ், வங்கிகணக்கு தொடங்குவதற்கு ஆதார் அட்டை இருந்தால், வேறு ஆவணங்கள் தேவையில்லை. வங்கிகணக்கு தொடங்கிய பிறகு, அவர்களுக்கு ஏ.டி.எம். கார்டு வழங்கப்படும். அதை பயன்படுத்தி நாடுமுழுவதும் உள்ள ஏ.டி.எம்.களில் பணம் எடுத்துக் கொள்ளலாம்.

ஒருலட்சம் ரூபாய்க்கான விபத்து காப்பீடும் வழங்கப்படும். ஓய்வூதியம், காப்பீடு போன்ற வசதிகளும் அளிக்கப்படும். மத்திய, மாநில அரசுகள் அளிக்கும் நிதி உதவிகளை, இந்த வங்கிக் கணக்கு மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

மாநில அரசு துறைகளின் திட்டங்களின் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு அதற்கான தொகை உடனுக்குடன் அனுப்பப்படும். இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ருபே கிசான் அட்டைகளை வழங்குவதற்கு கூட்டுறவுவங்கிகள் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளும்.

இந்நிலையில் இந்ததிட்டம் தொடங்கப்பட்ட மூன்றே மாதங்களில் இது வரை 8 கோடி மக்களுக்கு வங்கிக் கணக்கு துவக்கப்பட்டு தனது இலக்கை தாண்டி சாதனை படைத்துள்ளது .

இது தொடர்பாக மக்களவையின் கேள்வி நேரத்தின் போது மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியதாவது;

நாட்டில் உள்ள அனைத்து குடும்பத் தினருக்கும் வங்கிசேவை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி ஜன்தன் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்தார். இதன் படி 2015-ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதிக்குள் 7.5 கோடி குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு வங்கிக்கணக்கு தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால் இது வரை 7.98 கோடி பேருக்கு வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 26-க்குள் இது 10 கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தவிர, ஒவ்வொரு கிராமத்திலும் வங்கிக்கிளைகள் இல்லாவிட்டாலும் ஏடிஎம் மையங் களை திறக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்துடன் ஒவ்வொரு கிராமத்துக்கும் வங்கிசார்பில் ஒருவர்த்தக பிரதிநிதியை நியமிக்கவும் திட்டமிடப்பட் டுள்ளது. இதன் மூலம் வங்கி சேவையை நாடுமுழுவதும் விரி வாக்கம் செய்ய அரசு விரும்புகிறது.

சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினரை இலக்காக கொண்டு தொடங்கப்பட்டுள்ள இந்ததிட்டம், தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அருண் ஜேட்லி தெரிவித்தார்.

Tags:

Leave a Reply