இந்திய பிரதமர் மோடியின் வருகையால் இரு நாடுகளுக்கு இடையே 8 ஆயிரம்கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தக நடவடிக்கைகள் தொடங்கி யுள்ளதாக கனடா அரசு தெரிவித்துள்ளது.

அண்மையில், நரேந்திரமோடி, கனடாவுக்கு சென்றிருந்தார். அப்போது அந்நாட்டு அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இது குறித்து அந்நாட்டின் பிரதமர் அலுவலகம் தற்போது வெளியிட்ட அறிக்கையில், இந்தியப்பிரதமர் மோடியின் வருகையின் போது, இருநாடுகளின் நிறுவனங்களுக்கிடையே வர்த்தகம் தொடர்பாக 16 ஒப்பந்தங்கள் மற்றும் வர்த்தக அறிவிப்புகள் செய்யப் பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோடியின் கனடா பயணத்தால் 8 ஆயிரம்கோடி அளவிற்கு வர்த்தக நடவடிக்கைகள் தொடங்கி யுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply