பிரதமர் நரேந்திரமோடி பதவியேற்ற 15 மாதங்களில் சுமார் 25 நாடுகளுக்கும்மேல் வெளிநாடு சுற்று பயணத்தை மேற்கொண்டுள்ளார். மோடியின் அடுத்த 3 மாத வெளிநாட்டு பயணத்தை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

செப்டம்பரில் அயர்லாந்து, அமெரிக்கா, நவம்பரில் மலேசியா,இங்கிலாந்து, துருக்கி, சவுதி அரேபியா (உறுதி செய்யப்படவில்லை), டிசம்பரில் பிரான்ஸ், ஜனவரியில் இஸ்ரேல் என திட்டமிடபட்டுள்ளது.

மோடியின் வெளிநாட்டு பயணங்கள் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இது குறித்து மோடி கூறியுள்ளதாவது, நாம் பெரியநாடு என்ற தோரணையில் அகங்காரமாக பிற நாடுகளை புறக்கணித்தால், அதன் இழப்பை நம்மால் தாங்கிக் கொள்ள முடியாது. உலகரங்கில் இந்தியா தனித்து வைக்கப்படுவதால் நமக்கு தீமை தான். சமீபத்திய பல்வேறு ஆய்வுகள் எனது அரசின் வெளிநாட்டு கொள்கைக்கு அதிகப்படியான ஆதரவை பெற்றுத் தந்துள்ளன.

முன்னாள் ஆட்சியாளர்களுக்கு, எனது ஆட்சியில் குறைசொல்ல எதுவும் கிடைக்கவில்லை. எனவே எனது வெளிநாட்டு பயணங்களிலும், நான் எத்தனை நாள் சுற்றுப் பயணம் செய்கிறேன் என்பதிலும் கவனம் வைத்துள்ளனர் என்று குறிப்பிட்டார்.

Leave a Reply