இந்தியாவில் இணையசேவை (ISPs) வழங்கும் நிறுவனங்களிடம், 800-க்கும் மேற்பட்ட ஆபாசஇணையத் தளங்களை தடைசெய்யும் படி மத்திய அரசு கோரியிருப்பதாக தகவல்தொடர்பு அமைச்சகத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பெயர்குறிப்பிட விரும்பாத அதிகாரிகள் கூறும்போது "சில வலைத்தளங்களை திறனாய்வு செய்தபோது அவற்றில் சில மிகவும் ஆபாசமாக இருந்தன, இந்த வலைத் தளங்கள் மூலம் சமூக விரோத நடவடிக்கைகள் பரப்பபடுவதால் தடைசெய்யும் படி இணைய சேவை வழங்குநர்களுக்கு கடிதங்கள் அனுப்பபட்டுள்ளது" என தெரிவித்துள்ளனர்.

இந்த நடவடிக்கையானது 79 தகவல் சட்டபிரிவின் கீழ் எடுக்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Tags:

Leave a Reply