இன்றைய இளைய தலைமுறைக்கு ஆங்கில மாதம் மட்டுமே அறிந்திருக்கின்றனர். ஒரு சிலரே தமிழ் மாதம் பற்றி தெரிந்து வைத்திருக்கிறார்கள். நம்முடைய இந்திய கலாச்சாரத்தில் முக்கியமாக தமிழ் கலாச்சாரத்தில் உள்ள சிறப்புகள் எண்ணிலடங்காதவை.

நம் முன்னோர்கள் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே வானவியலிலும், ஜோதிடத்துறையிலும் நிபுணத்துவம் பெற்றிருந்தனர். ஆங்கில நாட்காட்டிக்கு முன்னோடி நம் இந்திய இந்து பஞ்சாங்க கணிதமாகும். உலகம் உருண்டை எனவும் சூரியனை மையமாக வைத்து எல்லாக் கிரகங்களும் சுற்றிவருகின்றன என்பதை வெளிநாட்டினர் 200 வருடங்களுக்கு முன்பு தான் கண்டுபிடித்தனர்.

ஆனால் நம் முன்னோர்கள் 2000 வருடங்களுக்கு முன்புகட்டிய கோவில்களில் நவக்கிரக சன்னதியில் சூரியனை மையத்தில்(நடுவில்)அமைத்து மற்ற கிரகங்களை வரிசைகிரமமாக அமைத்ததுள்ளனார்.

இதனால் சூரியனை மையமாக வைத்தே எல்லா கிரகங்களும் சுற்றுகின்றன என்பதை கணித்துநவ கிரக சன்னதியினை நாம் வழிபடும் கோவில்களில் அமைத்துள்ளனர்.எந்த ஒருதொலைநோக்கு கருவிகள் இல்லாமல் இது எப்படி சாத்தியமாயிற்று…….
சரி நம் விஷயத்திற்கு வருவோம்.

நம் முன்னோர்கள் வானமண்டலத்தை 360″ டிகிரியாக(பாகைகள்) கணித்து அதில்உள்ள நட்சத்திரக்கூட்டங்களை வைத்து 12 ராசிகட்டங்களாக பிரித்துள்ளனர், அதாவது ஒரு ராசிக்கு 30 டிகிரியாக பிரித்துள்ளனர்.

இந்த ஒவ்வொரு ராசிகளை சூரியன் கடந்து செல்லும் காலமே நம் தமிழ் மாதமாகும்.
12 ராசிகளில் முதன்மையானது மேஷராசி.இதில் சூரியன் பிரவேசிக்கும் காலமே சித்திரை மாதம் ஆகும்.

ரிஷபராசியில் பிரவேசிக்கும் மாதம் வைகாசி.
மிதுனராசியில் பிரவேசிக்கும் காலம் ஆனி.
கடகராசியில் பிரவேசிக்கும் காலம் ஆடி.
சிம்மராசியில் பிரவேசிக்கும் காலம் ஆவணி.
கன்னிராசியில் பிரவேசிக்கும் காலம் புரட்டாசி.
துலாம் ராசியில் பிரவேசிக்கும் ஐப்பசி.
விருச்சிகத்தில் பிரவேசிக்கும் காலம் கார்த்திகை மாதம்.
தனுசு ராசியில் பிரவேசிக்கும் காலம் மார்க்கழி மாதம்.
மகர ராசியில் பிரவேசிக்கும் காலம் தைமாதம்.
கும்பராசியில் பிரவேசிக்கும் காலம் மாசி மாதம்.
மீனராசியில் பிரவேசிக்கும் காலம் பங்குனி மாதம் என அழகாக பெயரிட்டுள்ளனர்.
இவ்வாறு சூரியனை வைத்து கணித்த நம் முன்னோர்களை போற்றுவோம்.
“ஏனெனில் சூரியன் இல்லையெனில் எதுவுமே இல்லை”

நன்றி.”சாய் அருள்” பகவத்.
E-Mail: bagavatth@yahoo.co.in

Tags ; தமிழ்  மாதம், தமிழ் மாதம் காலண்டர்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.