மக்கள் போதை பழக்கத்துக்கு அடிமை யாகும் பிரச்சினையை எதிர்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி மக்களிடம் இருந்து யோசனைகளை வரவேற்றுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை வானொலியில் ஒலிபரப்பான 'மனதில் தோன்றியது' என்ற நிகழ்ச்சியில் மோடி இந்த பிரச்சினையை தொட்டிருந்தார்.

இந்த்நிலையில் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், "மனதில்தோன்றியது நிகழ்ச்சிக்காக வந்த கடிதங்களில் போதைப்பழக்கத்தால் உருவாகும் பிரச்சினைகள் குறித்தும் நண்பர்கள் குறிப்பிட்டிருந்தனர். இந்த பிரச்சினை குறித்து நான் அடுத்த நிகழ்ச்சியில் பேசுவதாக கூறினேன். இந்தக்கொடிய அச்சுறுத்தல்கலை எதிர்கொள்ள உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன். எனது மைகவ் (MyGov) இணையதளத்தில் இவற்றை நீங்கள் தெரிவிக்கலாம்.

போதைப்பொருள் பயன் பாட்டுக்கு எதிராக செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் தங்கள் அனுபவங்களை குறிப்பிடலாம்" என்று கூறியுள்ளார்.

'மனதில்தோன்றியது' அடுத்த நிகழ்ச்சியில் சமூக பிரச்சினைகள் குறித்து பேசுவதாக மோடி கூறியுள்ளார். இந்தநிகழ்ச்சி 1 மாதத்துக்கு பிறகு மீண்டும் ஒலிபரப்பாகும் .

Leave a Reply