சீக்கியர்களால் கொண்டாடப் படும் குரு நானக் ஜெயந்தி விழாவையொட்டி நாட்டுமக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித் துள்ளார்.

குருநானக் பிறந்த தினமான (இன்று) நவம்பர் 6-ம் தேதி குருநானக் ஜெயந்தி விழாவாக உலகம் முழுவதிலும் உள்ள சீக்கியர்களால் கொண்டாடப் படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துசெய்தியில், "குரு நானக் தேவரை நான் பெரும் மதிப்பிற் குரியவராக வணங்குகிறேன். நாட்டுமக்கள் அனைவரும் அவரது பிறந்த தினத்தில் அவரது வழியில் உண்மை, அமைதி, இரக்ககுணம் ஆகியவை பெற்று மிகிழ்ச்சியுடன் வாழவேண்டும்" என்று கூறியுள்ளார்.

Leave a Reply