ஒவ்வொரு எம்.பியும் தனது தொகுதியில் ஏதோ ஒரு கிராமத்தை தத்தெடுத்து அங்கு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளும் 'எம்.பி. மாதிரிகிராம மேம்பாட்டு திட்டத்தை' பிரதமர் நரேந்திரமோடி அறிவித்திருந்தார். இந்த நிலையில் தனது சொந்ததொகுதியான உத்தரபிரதேச மாநிலம் வாரணாசிக்கு, நேற்றுசென்ற பிரதமர் மோடி, அங்குள்ள ஜெயப்பூர் என்ற கிராமத்தை தத்தெடுத்தார். பின்னர் நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:

மிகப் பெரும் தலைவர்கள் கடந்த 60 ஆண்டுகளாக மிகப் பெரும் விஷயங்களை பேசிக்கொண்டு இருந்தார்கள். ஆனால் அவற்றை நிறைவேற்ற முடியவில்லை. மிகச் சிறிய வனான நானோ, இந்த மிகப்பெரும் விஷயங்களை சிறிய உரையாடல் மூலமாக செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளேன்.

இந்த உலகில் பெண்கள் இல்லா விட்டால், மனிதசமூகம் வாழமுடியாது. இதனை பெண் குழந்தைகளை பாரமாக நினைப்பவர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். பெண்சிசுக்களை அழித்தால் என்ன நேரிடும்? 1000 ஆண் குழந்தைகள் பிறக்கும் இடத்தில் 800 பெண் குழந்தைகள் தான் பிறக்கிறார்கள். அப்படியானால், மற்ற 200 ஆண்கள் திருமணம் ஆகாதவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு திருமணம் நடத்திவைக்கும் வேலையை அரசுதான் செய்யுமா? எனவே பெண் சிசுக்களை அழிப்பதை கிராம மக்கள் கைவிட வேண்டும்.

கடின உழைப்பு மூலமாக நமது கிராமம் நிச்சயமாக முன்னுக்கு வரும் என்று நான் நம்புகிறேன். சாப்பிடுவதற்கு முன்பாக குழந்தைகள் நன்றாக கைகளை கழுவ வேண்டும். இதனை செய்யதவறியதால், வெளிநாடுகளில் 40 சதவீதம் பேர் உயிரிழக்கின்றனர். நம்முடைய குழந்தைகள் அதுபோல ஆகக்கூடாது. நாட்டுமக்களுக்கு நான் அதிகம் செய்யவேண்டும் என நினைக்கிறேன். அரசுதான் தங்களுக்கு எல்லாம் செய்யவேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள். அந்த மனநிலையை நான் மாற்றவிரும்புகிறேன். அரசுடைய பணிகள் மக்களால், அவர்களுடைய ஆதரவுடன் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது எனது விருப்பம்

நிறைவேற்ற முடியாத பெரியவாக்குறுதிகளை அள்ளிக்கொடுப்பவன் அல்ல நான். சிறிய திட்டங்களை சொன்னதைப்போல் செய்து காட்டுவதே என் வழக்கம். ஜெயாப்பூர் கிராமத்தை நான் தத்தெடுக்கவில்லை. அப்படி சொல்வதும் சரியல்ல. என்னைத்தான் ஜெயாபூர் வாசிகளான நீங்கள் தத்தெடுத்துக் கொள்ளவேண்டும்.

இந்த கிராமத்தை நான் தத்தெடுக்க பின்னணி இருப்பதாக ஊடகங்களில் விமர்சனங்கள் வெளியாகின்றன. ஆனால், இந்த ஊரைச்சேர்ந்த 5 பேர் தீ விபத்தில் இறந்து போனதாக வெளியான செய்தியே. என்னை இந்த ஊரை தத்தெடுக்க தூண்டுதலாக அமைந்தது  .

இன்று நான் இந்த கிராமத் திற்காக மிகப் பெரிய அறிவிப்புகளை வெளியிடுவேன் என நீங்கள் எதிர்பார்க்கலாம். ஆனால், நான் அப்படிச் செய்யப் போவதில்லை. பெரிய வாக்குறுதிகளை அள்ளிக் கொடுப்பவன் அல்ல நான். சிறிய திட்டங்களை சொன்னதை போல் செய்துகாட்டுவதே என் வழக்கம். இந்தகிராமத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதே எனது இலக்கு. கிராமவாசிகள் தங்கள் திறனை ஒன்றுபடுத்தி செயல்பட வேண்டும். அரசு உதவியை எதிர்பார்த்திருப்பதை விடுத்து களத்தில் இறங்கி கிராமவாசிகள் செய்லபடவேண்டும்.

குழந்தைகளுக்கு கல்வி அளித்தல், அடிப்படை சுகாதாரத்தை பேணுதல், சுற்றுப்புற தூய்மையை குடும்பத்தின் கொள்கையாக கொள்வது ஆகியவற்றை கிராமவாசிகள் உறுதிமொழியாக எடுத்து கொள்ள வேண்டும். ஜெயாபூர் கிராமத்தோடு இணைந்து செயலாற்றுவது மகிழ்ச்சி. நான் ஜெயாப்பூரின் வளர்ச்சிக்கு உறுதியளிக்கிறேன். தண்ணீர் பஞ்சம் இல்லாத புதிய ஜெயாப்பூரை உருவாக்கி காட்டுகிறேன்" என்றார்.

. என்று மோடி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.