மகாராஷ்டிராவில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பட்னாவிஸ் தலைமை யிலான அரசு குரல் வாக்கெடுப்பின் மூலம் வெற்றிபெற்றது.
.

முன்னதாக சட்டமன்ற சபாநாயகராக பாஜக.,வை சேர்ந்த ஹரிபாவ் பக்டே ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் மற்றும் சிவசேனா வேட்பாளர்கள் கடைசிநேரத்தில் வாபஸ் பெற்றுகொண்டனர்.

மகாராஷ்டிராவில் அக்டோபர் 15ந் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் 122-ல் வெற்றிபெற்று தனிப் பெரும் கட்சியாக ஆட்சி அமைத்துள்ளது. கவர்னர் விதித்த கெடுவின்படி முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நம்பிக்கை வாக்குபெறுவதற்காக 3 நாள் சட்டமன்ற சிறப்புகூட்டம் நேற்று தொடங்கியது. புதிய உறுப்பினர்கள் பதவியேற்ற பின் சபாநாயகர் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஆளும் பாஜக சார்பில் ஹரிபாவ் பக்டே, காங்கிரஸ் சார்பில் வர்ஷாகேக்வாத்,சிவசேனா சார்பில் விஜய் ஆவ்டி ஆகியோர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். மும்முனைப் போட்டி ஏற்பட்டிருந்த நிலையில், பாஜக வேட்பாளர்தவிர மற்ற இருவரும் வாபஸ் பெற்றுகொண்டனர். இதையடுத்து பாஜக உறுப்பினர் ஹரிபாவ் பக்டே ஒரு மனதாக சபாநாயகரானார். இதுபற்றிய அறிவிப்பை காலை 11 மணிக்கு தற்காலிக சபாநாயகர் ஜிவா பாண்டுகவித் அறிவித்தார். இதையடுத்து ஒத்துழைப்புதந்த எல்லா கட்சிகளுக்கும் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நன்றி தெரிவித்தார். இதை யடுத்து தேவேந்திர பட்வாஸ் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு விவாதமின்றி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து குரல்வாக்கெடுப்பில் அரசு வெற்றிபெற்றதாக அறிவிக் கப்பட்டது. முன்னதாக சிவசேனையின் மூத்த தலைவர் ராம்தாஸ் கடம் செய்தியாளர்களுக்கு அளித்தபேட்டியில், பாஜக மீது நாங்கள் நம்பிக்கை இழந்துவிட்டோம். நேற்றிரவு எங்கள் கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் உத்தவ் தாக்கரே பேசினார். அப்போது இந்த அரசை எதிர்த்து வாக்களிக்க முடிவெடுக்கப்பட்டது என்றார்.

இதனிடையே 41 உறுப்பினர்களை கொண்ட தேசியவாத காங்கிரஸ் தனதுமுடிவை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இந்த கட்சி நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்தால் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 246 ஆக குறையும். இதில் பெரும்பான்மை பெறுவதற்கு பாஜக வுக்கு 124 உறுப்பினர்களின் ஆதரவேபோதுமானது.

இந்நிலையில் எம்என்எஸ் உள்பட சில உதிரி கட்சிகளை சேர்ந்த 13 எம்எல்ஏக்கள் பாஜக வை ஆதரிக்க முன்வந்தனர். இதனால் சட்ட மன்றத்தில் பாஜக வின் பலம் 135 ஆக உயர்ந்துள்ளது.

தேசியவாத காங்கிரசும் நேரடியாக பாஜக அரசை ஆதரிக்க முன் வந்தால் சட்டமன்றத்தில் ஆளும் கட்சியின் பலம் 176 ஆக அதிகரித்துவிடும். இந்தநிலையில் எப்படி பார்த்தாலும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக எளிதில் வெற்றிபெறும் சூழ்நிலை உருவாகி இருந்தது.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.