2017-ம் ஆண்டுக்குள் உறுப்பு நாடுகளுக்கு இடையே, வரி தகவலை தானாகவே பரிமாற்றம் செய்ய வழி வகை செய்யப்படும் என்று ஜி20 நாடுகளின் தலைவர்கள் உறுதி தந்துள்ளனர். உலக நாட்டு தலைவர்கள் கலந்துகொண்ட சர்வதேச கூட்டத்தில், கருப்புபணம் தொடர்பான அச்சுறுத்தல் இந்தியாவால் உணர்த்தப்பட்டது.

நிறுவனங்கள் வரியில் அவர்களது நியாயமான பங்குகைசெலுத்த, 20 வளரும் மற்றும் வளர்ந்தநாடுகளின் தலைவர்கள் வரி ஏய்ப்பை சம்மாளிக்க, நடவடிக்கை எடுக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளனர். நடவடிக்கை 2015-ம் ஆண்டுக்குள் இறுதி செய்யப் படுகிறது. பிரிஸ்பேன் நகரில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் உள்ளிட்ட உலக நாட்டு தலைவர்கள் கலந்துகொண்ட ஜி 20 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில் கருப்புபணம் விவகாரத்தை எழுப்பினார். கருப்பு பணத்தை மீட்க உலக நாடுகள் ஒத்துழைப்பு அளிக்க அவர் கேட்டுக்கொண்டார்.

"எல்லைதாண்டிய வரி ஏய்ப்பை தடுக்க, நாங்கள் பரஸ்பர அடிப்படையில், வரிதகவல் தொடர்பாக தானி யங்கி பரிமாற்றத்திற்கு (AEOI), உலகளாவிய பொதுநிலை அறிக்கைக்கு நாங்கள் ஒப்புதல் அளித்துள்ளோம். நாங்கள் வரும் 2017-ம் ஆண்டு அல்லது 2018-ம் ஆண்டு இறுதிக்குள் ஒருவருக்கொருவர், பிறநாடுகளுடன் தன்னிச்சையாக தகவல்களை பரிமாறிக்கொள்ள தொடங்குவோம்." என்று 2 நாட்கள் நடைபெற்ற ஜி20 மாநாட்டிற்கு பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.