பெங்களூருவில் உள்ள சங்கரபுரத்தில் 2௦14 நவம்பர் 5 அன்று நடைபெற்ற இவ்விழாவில் முன்னாள் நீதிபதி ராமாஜாயிஷ், மூத்த பிரச்சாகர் கிருஷ்ணப்பாஜி, ஜெயதேவ் ஜி, கரநாடக மூத்த சங்க அதிகாரிகள், மேலும் தமிழ்நாட்டை சேர்ந்த ஷேத்ர கார்யவாஹ் ராஜேந்திரன் ஜி ஆகியோருடன் பெருமதிப்பிகுரிய செதுமாதவஞ்சி மாநில பொறுப்பாளர்கள், சூரிஜி என்று பாசத்துடன் அழைக்கப்படும் மானனீய ஸ்ரீ சூர்ய நாராயண ராவ் அவர்களின் 90 வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்று பெருமிதம் அடைந்தனர்.

நிகழ்ச்சியில் எஸ் வியாஸா யோக பல்கலை துணைவேந்தர் டாக்டர் ராமச்சந்திர பாட தனது உரையில் "வாழ்க்கையில் வேள்வி பல நடத்தியவர்களை பார்த்துள்ளோம். ஆனால், தன வாழ்வையே வேள்வி ஆக்கியவர் சூரிஜி" என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

சூரிஜியின் சிறுவயது முதல் அவரது நண்பரான ஸ்ரீ சம்பக்நாத் தனது அறிவுத்திறனால் சூரிஜி படிப்பில் சிறந்து விளங்கினார். அவரது நினைவாற்றல் இன்றும் நம்மை வியக்க வைக்கிறது. சுவாமி விவேகானத்தரைப் பற்றியும், ஸ்ரீமத் பகவத் கீதையைப் பற்றியும் அவர் பேசும்போது அதனில் அவரது ஆழ்ந்த ஜானதை நாம் அனைவரும் கண்டு வியந்துள்ளோம்.

"தமிழகத்தில் சங்க வேலை செய்ய கடினமாக இருந்த அந்த காலகட்டத்தில் அதனை மாற்றி அமைத்து வெற்றிபெற செய்ததில் சூரிஜியின் பங்கு அளப்பரியது. நம் அனைவருக்கும் இன்று வரை பல விதங்களில் அவர் மூலம் வழிகாட்டுதல் கிடைத்துக் கொண்டிருக்கிறது. அவர் மேலும் மேலும் நலமுடன் வாழ இறைவனைப் பிராத்திக்கிறேன்" என்று வியந்துரைதார்.

வாடா தமிழக பிராந்த சிங்கசாலக் டாக்டர் எம்.எல்.ராஜா பேசுகையில், "இருபது ஆண்டுகளுக்கு முன்பு முதல் முறையாக சூரிஜியை சந்தித்தேன். அவரது அயராத உழைப்பு அனைவரையும் போலவே என்னையும் ஆச்சரியப்பட வைத்தது. அவருக்கு தூக்கம் என்பது அவரது இரவு ரயில் பயணத்தில் மட்டுமே கிடைக்கும். அவரது கடினமான உழைப்பால் தமிழகத்தின் பிரபலமான பல குடும்பங்களை சங்கப் பணி செய்ய வைத்தார். ராமகிருஷ்ண தபோவனத்தில சுவாமி சித்பவானந்தா அவர்களுக்கு சங்கத்தை அறிமுகப்படுத்தினார். சூரிஜி தனது இந்த 9௦ வது வயதிலும் பல நிகழ்ச்சிகளுக்கும் ஸ்வயம்செவகர் இல்லங்களுக்கும் சென்றுவருவது சங்கத்தின் மீதும் ஸ்வயம் சேவக சகோதரர்கள் மீதும் அவர் வைத்துள்ள அன்பை எடுத்துக்காட்டுகிறது.

"இன்றைய தமிழத்தின் சங்க வளர்ச்சிக்கு மானனீய சூரிஜியின் வழிகாட்டுதல் முக்கிய காரணம்" என்று பேசிய அவர், "நாங்கள் தொடர்ந்து பணிபுரிய உங்கள் ஆசியும் வழிகாட்டுதலும் தொடர வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்" என்று சூரிஜியியைப் பார்த்து கேட்டுக்கொண்டார்.

 கர்னாடக பிராந்த சங்கசாலக் ஸ்ரீ வெங்கட்ராம் அவர்கள் தனது விளக்க உரையில், "குமரியில் விவேகானந்தர் நினைவுச்சின்னம் எழுப்புவதற்காக சூரிஜி வந்தபோது எனக்கு மாணவப் பருவம். அப்போது நான் முக்கிய சிக்ஷாக்காக இருந்தேன். அன்றைய தினம் மைசூரில் நடைபெற்ற அரங்க கூட்டத்தில், சூரிஜி, விவேகானந்தர் குறித்து பேசிய பொது கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் விவேகானந்தரே நேரில் வந்து பேசியது போல பிரமை ஏற்ப்பட்டது.

"அகில பாரத சேவா பிரமுக் ஆக பொறுப்பு ஏற்ற பிறகு, நாம் சமுதாயத்தை எப்படி தாயுள்ளத்தோடு பார்க்க வேண்டும் என சூரிஜி புரிய வைத்தார்.

"சமீபத்தில் கூட ஷிமோகாவில் நடந்த சங்க அறிமுக நிகழ்ச்சியில், சங்க சிந்தனைக்கு மாற்றுக் கருத்து கொண்ட நபர் வந்திருந்தார். நிகழ்ச்சியில் சூரிஜியின் கருத்தை, பேச்சை கேட்ட பிறகு இன்று சங்கத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார். இத்தகைய திறன் வாய்ந்த சூரிஜி அவர்களின் ஆசி தொடர வேண்டும் என்று விரும்புகிறேன்" என்று மனமகிழ்ச்சியுடன் எடுத்துக் கூறினார்.

நிகழ்ச்சியின் நிறைவில் மானனீய ஸ்ரீ சூரிஜி அவர்கள் தனது ஏற்புரையில் "நம்மை உருவாக்குயவர் ஸ்ரீ யாதவராவ் ஜோஷிஜி. இவ்வாண்டு அவரது நூற்றாண்டும் கூட. நம் அனைவருக்கும் இறைவன் சங்கப் பணி செய்ய பொறுப்பு கொடுத்தார். இந்த தூய பணிக்கு கடவுள் என்னை தேர்ந்தேடுத்தமைகாக அவருக்கு நன்றி கூறுகிறேன். டாக்டர்ஜியின் நேரடி தயாரிப்பில் வளர்ந்தவர் யாதவராவ் ஜி. அவரது தயாரிப்பில் வளந்தது நான் செய்த பாக்கியம். அவரது முயற்சியில் தூசியெல்லாம் சந்தன மயமானது.

"ஒருவர் என்னிடம் வந்து 'சங்கத்தில் என்ன கற்றுக்கொண்டீர்கள்?' என கேள்வி கேட்டார். 'குறிப்பு வந்தால் அதற்கு கீழ்படிவதுதான் நான் கற்றுக்கொண்டது' என்றேன். உங்கள் அனைவரின் பிரியத்தால் இத்தகைய நிகழ்ச்சி அமைந்துவிடுகிறது. நான் சாட்சி மட்டுமே! தமிழகத்தில் சங்க வளர்ச்சி என்னால் தான் நடைபெற்றது என்றெல்லாம் பேசினார்கள். அவர்கள் எல்லாம் வேலை செய்தபோது நான் அப்போது பொறுப்பில் இருந்தேன், அவ்வளவு தான்.

"இந்த இயக்கம் ஏராளமானவர்களின் தியாகத்தில் வளர்ந்த இயக்கம். ஆயிரக்கணக்கான குடும்பங்களில் உள்ளவர்கள் செய்த தியாகத்தினால் வளர்ந்த இயக்கம் இது. என்னுடன் வளர்ந்தவர்களில் பலர் இன்று இல்லை மாற்றங்களை காணும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. அதற்கு உங்களின் பிரார்த்தனையும், கடவுளின் ஆசியும் தான் காரணம்" என்றார்.

பரமபூஜனீய சர்சங்கசால ஸ்ரீ மோகன் பாகவத் ஜி சூரிஜிக்கு கடிதம் மூலமாக வாழ்த்து தெரிவித்திருந்தார்

நன்றி; விஜய பாரதம்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.