தமிழகத்தில் 2016 சட்டப் பேரவைத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி ஆட்சி அமையும் பாஜக மிகப் பெரிய சக்தியாக தமிழத்தில் உருவெடுத்து வருகிறது என்று, பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தர ராஜன் தெரிவித்துள்ளார் .

பாஜக உறுப்பினர் சேர்க்கைக்காக வேலூரில் மண்டல அளவில் நடந்த பயிற்சி முகாமில் பங்கேற்க வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

பாஜக உறுப்பினர் சேர்க்கை கடந்த நவம்பர் 1-ம் தேதி தொடங்கியது. கடந்த 20 நாள்களில் மட்டும் நாடுமுழுவதும் 90 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். தமிழகத்திலும் தினசரி சராசரியாக 2 ஆயிரம் பேர் "மிஸ்டுகால்' மூலம் உறுப்பினர்களாகச் சேர்ந்து வருகின்றனர். தமிழக பாஜக.,வில் 10 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இதை 10 மடங்காக உயர்த்த முயற்சித்து வருகிறோம்.

தமிழகத்தில் முட்டை , சாலை , மின்சாரம் , பருப்பு என பல துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டது. சாலைகள் முறையாகச் செப்பனிடப்படவில்லை. இவற்றைத் தட்டிக் கேட்கும் நேர்மையான அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுகின்றனர். தமிழக அரசு செயல்பாடின்றி முடங்கிக் கிடக்கிறது.

தருமபுரி அரசு மருத்துவ மனையில் குழந்தைகள் இறப்பு அதிகரித்துவருகிறது. அங்கு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, பணியிடங்களை நிரப்பி குழந்தை இறப்பை உடனடியாக தடுக்கவேண்டும். அரசு மருத்துவ மனைகளில் இரவுநேரங்களில் மருத்துவர்கள் இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதிலும் அமைச்சர் கவனம் செலுத்தவேண்டும்.

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் குறுக்கே இருஅணைகள் கட்டுவதை தமிழக பாஜக கடுமையாக எதிர்க்கிறது. இதுதொடர்பாக மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமா பாரதிக்கு கடிதம் எழுதியுள்ளோம்.

முல்லை பெரியாறு, பாலாறு, காவிரி பிரச்னைகளுக்குத் தீர்வுகாண, நதிகள் தேசியமயமாக்கப்பட்டு அவை இணைக்கப்பட வேண்டும் என்பதே பாஜக.,வின் தொலை நோக்குத் திட்டம். நதிகள் இணைப்பு மட்டுமே இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக அமையும். மீனவர் பிச்னை: தமிழக மீனவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளது வருத்தம் தருகிறது . இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க அனைத்து முயற்சிகளையும் பாஜக மேற்கொள்ளும்.

மீனவர்கள் வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்து நிரந்தரத்தீர்வுக்கான கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

ஆழ் கடல் மீன்பிடிப்பை ஊக்குவிக்கும் திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம், எல்லை தாண்டி மீன்பிடிப்பது, மீனவர்களை கைதுசெய்வது போன்ற நிகழ்வுகள் தடுக்கப்படும்.

தமிழகத்தில் அ.தி.மு.க, தி.மு.க ஆகியவற்றின் மீது ஊழல் குற்றச் சாட்டுகள் உள்ளன. மாறாக, பாஜக மிகப் பெரிய சக்தியாக தமிழத்தில் உருவெடுத்து வருகிறது. காங்கிரஸ் இரண்டாக உடைந்து விட்டது.

அதனால், தமிழகத்தில் மிகப்பெரும் சக்தியாக உருவெடுத்து வரும் பாஜக தலைமையிலான கூட்டணிதான் 2016 தேர்தலில் ஆட்சியமைக்கும். அதற்கான திட்டங்களையும், வியூகங்களையும் வகுத்துவருகிறோம் என்றார்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.