இராமஜென்ம பூமி – பாபர் மசூதி தொடர்பான வழக்குகள் அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு சிவில் வழக்குகள் நடந்தன.

அதில் பல்வேறு வாதங்கள் எழுப்பப்பட்டன. இந்த இடத்தில இராமர் கோவில் இருந்ததாகத் தெரிய வந்தால் நாங்களே இந்துக்களிடம் இடத்தை ஒப்படைத்து விடுவோம் என்றார்கள் அகழ்வாராய்ச்சியில் அந்த இடத்தில் கோவில் இருந்தது நீருபிக்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் காலத்திலேயே இராமஜென்ம பூமியை ஏற்கும் விதத்தில் ஜன்மஷ்தான் காவல் நிலையம் ஜென்மஷ்தான் இரயில் நிலையம் என்றும் பெயர் வைக்கப்பட்டு இன்றளவும் வழக்கப்பட்டு வருகிறது. இந்தச் சிறு கட்டுரையின் நோக்கம் அயோத்தியா – இராமஜென்ம பூமிதான் என்று நிறுவுவதல்ல.

உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் (ஓர் இஸ்லாமிய நீதிபதி உட்பட) வழக்கின் அனைத்துச் சான்றுகள், சான்றாவணங்கள்,சாட்சியங்கள் அனைத்தையும் ஆய்வுக் குட்படுத்தி, இராமஜென்ம பூமி 3-ல் இரண்டு பங்கு நிலம் இந்துக்களுக்குச் சொந்தம் என தீர்ப்பளித்தனர்.

இராமஜென்ம பூமியைச் சுற்றி விஷ்வ இந்து பரிட்சத் சுமார் 65 ஏக்கர் நிலத்தை விலைக்கு வாங்கியுள்ளது. அதனை முந்தைய காங்கிரஸ் அரசாங்கம் நில ஆர்ஜிதம் செய்து வைத்துள்ளது. உயர்நீதி மன்றத் தீர்ப்பு யார் பக்கம் வருகின்றதோ உடனே அவர்களிடம் ஒப்படைப்போம் என அறிவித்தனர். பெரும் பகுதி நிலம் இந்துக்களுக்கு என்றுத் தீர்ப்பு வந்த பின்பும் ஆர்ஜிதம் செய்யப்பட்ட நிலம் இந்துக்களிடம் ஒப்படைக்கப்படவில்லை.

1992-ம் வருடம் பாபர் மசூதியை இடித்ததாகத் தலைவர்கள் அத்வானி, உமாபாரதி, அசோக் சிங்கால் உட்படப் பல்வேறு தலைவர்கள் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. இன்றும் குற்றவியல் வழக்குகள் நடந்து வருகின்றது. இது எந்த வகையில் சரி? உதாரணமாக தனது ஒரு வீட்டை இடித்ததாக ஒருவர் மீது மற்றோருவர் குற்றம் சாட்டுகின்றார். வீட்டை இடித்தவர் மீது கிரிமினல் வழக்கும் தொடரப்பட்டு நடந்து வருகின்றது என்று வைத்துக் கொள்வோம். அந்த நபர்களுக்கு இடையே உள்ள சிவில் வழக்கில் இடித்தவருக்குத் தான் சொத்துச் சொந்தம் என சிவில் நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டால், தனது வீட்டைத் தானே இடித்துக் கொண்டார் எனக்குற்றவியல் நீதிமன்றங்கள் தண்டனை தரமுடயுமா? இதுதானே இராமஜென்ம பூமி வழக்கிற்கும் பொருந்தும்.

கோவிலை இடித்து விட்டார்கள் என யாராவது இந்துக்கள் புகார் கொடுத்துள்ளார்கள்? இல்லையே! அப்படியிருக்க சிவில் நீதிமன்றம் இந்துக்களுக்குதான் பெரும் பகுதி நிலம் சொந்தம் (கர்ப்பக் கிரகம் அமைந்துள்ள இடம் உட்பட) எனத் தீர்ப்பு அளிக்கப்பட்ட பின்பு குற்றவியல் வழக்கில் எந்த விதச் சத்தும் இல்லை,சாரமும் இல்லை. ஆகவே சட்டத்தின் ஆட்சி நடப்பதாகச் சொல்லப்படும் நம் நாட்டில் அனைவரும் அரசாங்கம், காவல் துறை உட்பட அனைத்துத் தரப்பினரும் சட்டத்தை மதித்து நடக்க வேண்டும்.

அலகாபாத் உயர்நீதிமன்ற சிவில் நீதிமன்றத் தீர்ப்பினை மதித்து உடனடியாக அது தொடர்பான அனைத்துக் குற்றவியல் வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும். அபோதுதான் சட்டத்தின் ஆட்சி நம் நாட்டில் நடப்பதாகப் பொருள் கொள்ளமுடியும். ஆகவே அரசாங்கமே குற்றவியல் வழக்கினை வாபஸ் பெறுக.

நன்றி : ஒரே நாடு
– தி.ஈ.ராமநாதன்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.