நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி உரையாற்ற அழைப்புவிடுக்க வேண்டும் என வலியுறுத்தி அமெரிக்க பிரதிநிதிகள் அவையின் தலைவருக்கு 83 எம்பிக்கள் கையெழுத்திட்டு கடிதம் அனுப்ப உள்ளனர். வரும் செப்டம்பர்மாதம் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்கிறார்.

ஜனநாயக அடிப்படையில் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் நிகரற்றநெருக்கம் நிலவுகிறது என்பதே நாடாளுமன்றத்தில் ஒலிக்கும்குரல். இந்த உறவை விரிவுபடுத்த மோடியின் பயணம் நல்ல வாய்ப்பாகும் என்று கூறி இருக்கிறார் அமெரிக்க எம்பி பிராட்ஷெர்மான்.

அவையின் வெளியுறவு விவகாரகமிட்டி மூத்த உறுப்பினராக உள்ள ஷெர்மான் பிற எம்பிக்களான டெட்போ, ஈனி பேலியோ மவேகா ஆகியோருடன் இணைந்து கூட்டுக்கூட்டத்தில் உரையாற்ற மோடிக்கு அழைப்பு விடுக்கும்படி பிரதிநிதிகள் அவையின் தலைவர் ஜான்பெய்னரை வலியுறுத்தி உள்ளனர்.

இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் பிரதமர் மோடியை உரையாற்ற அழைக்க நான் எடுத்துள்ள முயற்சியில் 82 பேர் சேர்ந்துள்ளது மகிழ்ச்சி தருகிறது என்றார் ஷெர்மான்.

Tags:

Leave a Reply