தமிழகத்தில் வேலூர், திருவண்ணாமலை, ஈரோடு உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 5 இயற்கைமாதிரி கிராமங்களுக்கு முதற்கட்டமாக ரூ.50 லட்சத்தை மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தியாவில் உள்ள விவசாயிகள், செயற்கை உரங்களை பயன் படுத்தி

விவசாயம் செய்து வருகின்றனர். இதனால் மண்ணின் தன்மை முற்றிலும் மாறியுள்ளது. இந்த நிலையில், மத்திய அரசு ஒருங்கிணைந்த ஊட்டச் சத்து நிர்வாக திட்டத்தின்கீழ் இயற்கை உரங்களை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்தும் வகையில் அவர்களுக்கு மானியவிலையில் அவற்றை வழங்க உள்ளது. இதற்காக மலை கிராமங்களில் உள்ள விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு ரூ.10 லட்சத்தில் இயற்கை உரம், மண் புழு உரம் தயாரித்தல், விளக்குப் பொறி பயன்படுத்தி பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறை, பசுந்தாள் உர விதைகள், உயிரியல் விதைகள், மலைப்பகுதியில் வளரக்கூடிய பயிர்கள் மற்றும் மரக்கன்றுகளை 50 சதவீத மானியத்தில் வழங்குகிறது.

இதைத்தொடர்ந்து தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மலை கிராமங்கள் குறித்த பட்டியலை வழங்கும்படி அந்தந்த வேளாண் இணை இயக்குனர்களுக்கு, வேளாண் துறை இயக்குனரகம் உத்தரவிட்டது. அதன்படி, தமிழகத்தில் முதற்கட்டமாக 5 மாவட்டங்களில் தலா ஒருமலை கிராமம் இயற்கை மாதிரி கிராமமாக தேர்வு செய்யப் பட்டுள்ளது. ஒரு கிராமத்துக்கு ரூ.10 லட்சம் வீதம் 5 கிராமத்திற்கு மொத்தம் ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.வேலூர் மாவட்டத்தில் ஏலகிரி, திருவண்ணா மலை மாவட்டத்தில் எலத்தூர், ஈரோடு மாவட்டத்தில் பர்கூர், தர்மபுரி மாவட்டத்தில் சிகரல ஹள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெத்த முகிலாம் ஆகிய 5 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகளின் பட்டியலை இந்த கிராமங்களில் வேளாண்துறை அதிகாரிகள் தேர்வுசெய்து வருகின்றனர். அதன் பின்னர் மாநில அரசின் மானியம் 20 முதல் 25 சதவீதம் வரை வழங்கப்படும் நிலையில் மத்திய அரசு மேற்கண்ட திட்டத்தை நடை முறைப்படுத்தும் என்று வேளாண் இணை இயக்குனரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.