உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது.

பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ஒன்றரை லிட்டர் நல்லெண்ணெயில் கலந்து காய்ச்சி வடித்து ஆறு மாதத்திற்குமேல் தலைமுடிக்குத் தடவி வர தலைமுடி நரையின்றி நீண்டு வளரும்.

எலுமிச்சை சாற்றுடன் தேன் கலந்து கொடுத்துவர இருமல், வறட்டு இருமல் குணமாகும்.

இஞ்சிச்சாறு, எலுமிச்சைசாறு, தேன் கலந்து சாப்பிட்டு வர மார்புவலி தீர்ந்து குணமாகும்.

எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி அதில் ஒரு பாதியை எடுத்து சிறிது இந்துப்பை வெட்டுப்பட்ட பகுதியின்மேல் தூவி சிறிதுநேரம் வைத்திருந்து அப்படியே வாயில் பிழிந்துவிட்டுக்கொள்ள மலச்சிக்கல் தீர்ந்து குணமாகும்.

மோரில் எலுமிச்சை இலைகளை ஊறவைத்து அந்த மோரை உணவுடன் சேர்த்துக்கொள்ள வெட்டைச்சூடு, பித்தச்சூடு குறைந்து குணம் உண்டாகும்.

எலுமிச்சை பழத்தை நகச்சுற்றுள்ள விரலில் சொருகி வைக்க நகச்சுற்றானது பழுத்து உடையும்.

 

எலுமிச்சை ஒரு அழகு சாதனம். சருமம், தலைமுடி, கைகள், பாதங்கள் மற்றும் உடம்பின் அழகுப் பராமரிப்பில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றிருக்கிறது.

சருமத்தின் நிறமாற்றங்களை சரிசெய்யும். சருமத்தில் ஏற்படும் கொப்புளம் போன்ற குறைகளைப் போக்குகிறது. பாதிக்கப்பட்ட இடத்தில் எலுமிச்சை துண்டுகளைத் தேய்க்கலாம். எலுமிச்சையில் உள்ள எண்ணெய்கள் வறண்ட, தோலுரியும் சருமத்திற்கு ஈரப்பதத்தை மீட்டு வழங்கும். கழுத்து, தொண்டைப் பகுதி சருமத்தை மென்மையாக்க எலுமிச்சைத் துண்டைத் தேய்க்கலாம்.

முழங்கால் மற்றும் விரல்களில் ஆழப்பதிந்த மாசுகளை அகற்ற, கருமையுறாமல் தடுக்க எலுமிச்சைத் தோலால் தேய்க்க வேண்டும். சருமத்தில் உள்ள இயற்கை அமிலத்தன்மை பாதிக்கப் பட்டால் நுண்ணுயிர்கள் பெருகி கரப்பான் போன்ற தொல்லைகள் ஏற்படும். சருமத்தின் அமிலப்போர்வையை எலுமிச்சை அமிலங்கல் புதுப்பிக்கும்.

எலுமிச்சை சாற்றுடன், சர்க்கரை சம அளவில் கலந்து நீங்களே ஒரு லோஷன் தயாரித்துக் கொள்ள முடியும். அந்தக் கலவையை கைகளில் தேய்த்து, நீரில் கழுவ வேண்டும். இப்படி தவறாமல் செய்துவர கைகள் மிருதுவாகும். நல்ல நிறம் கிடைக்கும். இந்தக் கலவையுடன் சிறிது வெண்ணையும் கலந்து கொண்டால் கரி, புழுதி, அழுக்கு போன்றவை கைவிட்டுப் போகும்.

சொறி சிரங்கு
வைட்டமின் சி பற்றாக்குறையில் உண்டாகும் சொறி சிரங்குகள் குணமாக ஒருபங்கு எலுமிச்சை சாற்றுடன் மூன்றுபங்கு தண்ணீர், போதிய அளவு சர்க்கரை கலந்து உட்கொள்ளலாம்.

'ஈறுகளில் ஏற்படும் அழற்சி, பயோரியா, பற்சொத்தை போன்றவை சம்பந்தமான உபாதைகளை குணப்படுத்த வைட்டமின் சி அவசியம். அது எலுமிச்சையில் உள்ளது.

தொண்டைப் பிரச்சனைகள்
ஜலதோஷம், சளி, தொண்டை எரிச்சலில் நல்ல பலனை அளிக்கும். எலுமிச்சை சாற்றில் (ஒரு தேக்கரண்டி அளவு) தேன் கலந்து ஒரு மணிக்கொருமுறை கொடுத்தால் குணம் தெரியும். அல்லது ஒரு கிளாஸ் சுடுநீரில் எலுமிச்சை சாறு விட்டு, சில துளிகள் தேனும் கலந்து தரலாம்.

காலின் அடிப்பாகம் மற்றும் குதிகால் எரிச்சலுக்கு எலுமிச்சம் பழத்தை பாதியாக அரிந்து பாதிக்கப்பட்ட பகுதியில் தேய்க்கலாம். பாதத்தின் துவாரங்களில் உள்ள நச்சுத்தன்மை வெளியேறும். எலுமிச்சைச்சாறு கால் ஆணியையும் குணப்படுத்தும்.

சீரணக் கோளாறு
எலுமிச்சைச் சாறு உமிழ்நீரைத் தூண்டும்; குடல் ரசத்தையும் தான். அதனால் ஜீரண சக்தி மேம்படும். குடலில் உள்ள புழுக்களை நாசம் செய்வதோடு, சீரணப்பாதையில் உண்டாகும் வாயுக்களையும் நீக்கிவிடும்.

அஜீரணம், மலச்சிக்கல், பித்தநீரால் ஏற்படும் குமட்டல் போன்ற அவதிகளையும் நீக்கும். அரைமூடி எலுமிச்சை சாற்றை சிறிதளவு நீருடன் கலந்து பருகினால் நெஞ்செரிவு தீரும்.

பருமன்
பருமனுக்கு நல்ல பரிகாரம் எலுமிச்சை சாறு. முதல்நாள் நோயாளிக்கு தண்ணீரைத் தவிர வேறெதுவும் கொடுக்கக் கூடாது. தினமும் ஒரு எலுமிச்சை கூட்டிக்கொண்டே போய் நாள் ஒன்றுக்கு பன்னிரண்டு எலுமிச்சை உட்கொள்ளும்வரை தொடர வேண்டும். பிறகு அதே வரிசையில் தினம் ஒரு எலுமிச்சையாக குறைத்துக் கொண்டே வரவேண்டும். ஒரு நாளில் மூன்று எலுமிச்சை சாறு உட்கொள்ளும் நாளோடு நிறுத்திக் கொள்ளலாம். நோயாளி பலவீனமாகவும் பசியாகவும் உணரும் நிலை முதல் இரண்டு நாட்களில் காணப்படும். ஆனால் பிற்பாடு தன்னால் சரியாகி விடும்.

ஜலதோஷம்
கடுமையான ஜலதோஷம் உள்ளவர் அரைலிட்டர் சுடுநீரில் இரண்டு எலுமிச்சம்பழங்களைப் பிழிந்து, தேன் கலந்து படுக்கைக்குச் செல்லும்போது அருந்தினால் சரியாகும்.

எலுமிச்சை சாற்றை உணவுடன் கலந்து உட்கொள்வதில் சுவாசமண்டல உபாதைகள் பலவும் நீங்கும்.

பற்களின் ஆட்டம், ஈறுகளில் மாவு போன்ற பதிவு, சோகை போன்ற நிலைகளில் எலுமிச்சை பரிகாரமாகும்.

 

Tags:

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.