உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் சுவையால் சக்தி பெறுகின்றன. புண்களை ஆற்றும் சக்தி துவர்ப்புக்கு உண்டு.

பொதுவாக நோயில்லாத ஒருவர் எதை உண்டாலும் அவருக்கு அதற்கேற்றவாறு இரத்தம் கிடைக்கிறது. அவர் துவர்ப்பு பொருள்களை உண்ண வேண்டும் என்பது அவசியமில்லை. உண்ணும் உணவுகள் எல்லாம் அன்னரசமாகிப் பிறகு இரத்தமாக மாறுகின்றன. பிறகு இரத்தம் மற்ற தாதுக்களாக மாறுகிறது. இரத்தம் குறைந்தால் அதற்கேற்றவாறு மாற்றுத் தாதுக்களும் முறையாக படிப்படியாகக் குறையும்.

தரமற்ற உணவு, அளவுக்கு அதிகமான உணவு, அதிக உறக்கம், ஒழுக்கக் கேடுகள் முதலியவற்றால் அவற்றிற்குத் தக்கவாறு இரத்தம் குறையும். மற்றும் பசிக் குறைவால் சீரன சக்தி குறைவதனால் உடலில் இரத்தம் குறையலாம். நாற்பது வயதுக்கு மேல், ஆண்களுக்குக் காதோரத்தில், பெண்களுக்கு உச்சந்தலையில் முடி நரைக்கும்போது உடலில், ஒழுக்கத்திற்கேற்றவாறு இரத்தம் குறையலாம்.

பசி குறைவதனால் உண்டான காரணத்தை யோசித்து அசீரணத்திற்கான காரணத்தைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். பசி குறைவதற்கு, உடலுக்கு ஏற்றவாறு பல காரணங்கள் இருக்கின்றன.

இரத்தம் குறையும்போது, உடலுக்கு, உழைப்புக்கு, வயதிற்கேற்ற அளவு உண்பதால், எளிய உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்வதால் போதிய இரத்தம் இருக்கும்படி மாற்றம் செய்து கொள்ளலாம்.

இரத்தத்தைச் சுத்தமாக போதிய அளவு இருக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும். உடல் வெளுத்தல், சோர்வு, காமாலை முதலிய நோய்கள் இரத்தக் குறைவினால் தோன்றுகின்றன.

இந்நோய்கள் உள்ளவர்களுக்கு நகமும், கண் உள் இமையும் வெளுத்துத் தோன்றுமானால் இரத்தக் குறைவு உள்ளது என்று அறியலாம். நகம் மற்றும் கண் உள் இமையும், சிவந்து தோன்றுமாயின் உடலில் போதிய இரத்தம் இருக்கின்றது என்று உணரலாம். ஆனால் கண்கள் சிவந்து காணக்கூடாது.

சப்போட்டாப் பழம் பயன்படுத்தினால் உடலில் புதிய இரத்தம் உண்டாகும். உடலில் உள்ள தேவையற்ற நச்சுப் பொருள்கள் முறையாக வெளியேற்றப்படும். சப்போட்டாப் பழம் கிடைக்காதபோது, அத்திப்பழம் சுத்தம் செய்து பயன்படுத்தலாம். இவை இரண்டும் கிடைக்காத போது, இரண்டு பேரீச்சம் பழங்களைச் சுத்தப்படுத்தி, இரண்டு வெள்ளைப்பூண்டுத் திரிகளைச் சுத்தப்படுத்தி இரண்டையும் ஒன்று சேர்த்துப் பயன்படுத்தலாம்.

பருப்பு வகைகள், தேங்காய், அத்திக்காய், நெல்லிக்காய், கடுக்காய், ஈச்சங்காய், காட்டுக் களாக்காய், சப்போட்டாப்பழம், மாதுளம்பழம், விளாம்பழம், மாம்பருப்பு, வாழைப்பூ, வாழைப்பிஞ்சு, வாழைத்தண்டு, வில்வ இலை, மணத்தக்காளி கீரை போன்றவற்றில் துவர்ப்புச் சுவை உண்டு.

நன்றி : வேலூர் மா.குணசேகரன்

Tags:

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.