பெட்ரோல், டீசல்விலை குறைந்துள்ளது என் அதிர்ஷ்டம் என்று எதிர்க் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. எனக்கு அதிர்ஷ்டம் என்றால், நாட்டுக்கு இல்லையா? ஏன், அதிர்ஷ்ட மில்லாத அரசைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? என்று பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.

தில்லி சட்டப் பேரவை தேர்தல் வரும் 7-ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரசாரப் பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி பேசியதாவது:

ஏழைகள் இல்லா இந்தியாவை உருவாக்கவேண்டும் என சில அரசியல் கட்சிகள் கூறிவருகின்றன. ஆனால், கடந்த 40 ஆண்டுகளாக இந்தியாவில் உள்ள ஏழைமக்கள், வங்கி கணக்கை தொடங்க துணிவின்றி இருந்தனர். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மத்தியில் பொறுப் பேற்றபின், "ஜன் தன் திட்டம்' மூலம் அவர்களுக்கு வங்கிக்கணக்கு தொடங்குவதை சாத்தியமாக்கி உள்ளோம். இதே போல், தில்லியில் உள்ள அங்கீகரிக்கப்படாத காலனிகளை அறிந்துள்ளேன். அவர்களுக்கு அங்கீகாரம் அளிக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

தற்போது பாஜக தலைமையில் ஆட்சி அமைந்துள்ள மற்ற மாநிலங்களின் வளர்ச்சியை பாருங்கள். அதை கருத்தில்கொண்டு வாக்களியுங்கள்.

காங்கிரஸூம், ஆம் ஆத்மியும் திரை மறைவு அரசியலில் ஈடுபட்டு மக்களை ஏமாற்றிவருகின்றன. அவற்றின் வரலாற்றைப் பார்த்தால் யார் அதிகபொய் வாக்குறுதிகள் அளித்திருக்கிறார்கள் என்பது தெளிவாக புரிந்துவிடும். அரசு நடத்துவது என்பது ஒருமுக்கிய கடமை. அதற்கு கடின உழைப்பு அவசியம். நீங்கள் சரியான அரசை தேர்ந்தெடுக்க தவறினால், தில்லியில் நிலவும் பிரச்னைகளுக்கு தீர்வுகாணாமல், தொலைக் காட்சிகளில் வருவதையே விரும்பும் நபர்கள்தான் ஆட்சிக்கு வருவர்.

தற்போது பெட்ரோல், டீசல்விலை குறைந்துள்ளது என் அதிர்ஷ்டம் என்று எதிர்க் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. எனக்கு அதிர்ஷ்டம் என்றால், நாட்டுக்கு இல்லையா? ஏன், அதிர்ஷ்ட மில்லாத அரசைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?

மக்களவைத் தேர்தலுக்கு முன் பிரசாரம் மேற்கொண்டபோது, குஜராத்திற்கு அப்பால் இவரை (மோடி) யார் அறிவார்கள்? என்று சிலர் பரிகசித்தனர். நான் பிரதமரான பிறகு, இந்தியாவை தாண்டி இவரை யார் அறிவார்கள்? என பேசி வருகின்றனர். இதே போல், வெளியுறவு கொள்கைகளையும் இவர் அறியமாட்டார் என்றும் நகைத்தனர். தேசிய பிரச்னைகளும், கொள்கைகளும் அறிந்த நான், நாட்டின் வெளியுறவு கொள்கையும் பிரச்னைகளையும் நன்கு அறிவேன். 125 கோடி மக்களின் ஆதரவுடன் வெளி நாட்டு தலைவர்களை சந்தித்து வருகிறேன். அவர்களின் சார்பாகவே நான் உள்ளேன்.

தில்லி என்பது சிறிய இந்தியா. இது நம் நாட்டின் பெருமையை பறைச் சாற்றும் இடமாகவும் திகழ்கிறது. தில்லியுடன் இணைந்து தான் மத்திய அரசும் செயல்பட்டு வருகிறது. தில்லியின் வளர்ச்சிக்கு நிலையான, பொறுப்புள்ள ஆட்சியமைவது மிகவும் அவசியம். வளர்ச்சியை முன்னிறுத்தியே என் அரசு செயல்பட்டு வருகிறது. எனவே, தில்லி மக்களுடன் கைகோத்து செயல்பட எனக்கு வாய்ப்பு அளியுங்கள். நம்நாட்டை புதிய உச்சத்துக்கு என்னால் கொண்டுசெல்ல முடியும் கிரண் பேடிக்கு நிர்வாக அனுபவம் இருக்கிறது. மக்களுக்காக பாடுபட வேண்டும் என்ற வலுவான நோக்கங்கள் கொண்ட பெண் அவர். டெல்லி வரலாற்றில் கிரண் பேடி பங்கு கொண்டவர். சிட்டியில் உள்ள ஒவ்வொரு தெருவும் அவருக்கு தெரியும். 'கிரண் பேடி டெல்லியை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வார் என்று பிரதமர் மோடி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.