தீவிரவாதத்திற்கும், அரசின் வளர்ச்சி திட்டங்களுக்கு எதிரான போராட்டங் களுக்கும் துணைபோகும், நிதியுதவி அளிக்கும் என்.ஜி.ஓ நிறுவனங்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. மொத்தம் 188 என்.ஜி.ஓ நிறுவனங்கள் குறித்த பட்டியலை மத்திய உள் துறை அமைச்சகம் தயாரித்துள்ளது.

இந்த நிறுவனங்களுக்கு நிதிவரும் ஆதாரம் உள்ளிட்டவை குறித்து மத்திய அரசு தீவிரவிசாரணை நடத்தி நடவடிக்கையும் எடுக்க திட்டமிட்டுள்ளது. தவறு செய்த நிறுவனங்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

இந்தப் பட்டியலை மத்திய உளவுப் பிரிவான ஐபி தயாரித்துள்ளது. இதுகுறித்து கடந்த 2006ம் ஆண்டே ஐபி விசாரணையை தொடங்கி விட்டது இருப்பினும் மதச்சார்பு அரசியல் தலையிடுகளின் காரணமாக நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படாமல் இருந்தது இந்நிலையில் பாஜக அரசு ஆட்சி பொறுப்பேற்றது இதுகுறித்த நடவடிக்கையில் தீவிரம் காட்டியுள்ளது.

இந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் சில, அரசின் வளர்ச்சி திட்டங்களை முடக்கு வதற்காக சிலரிடமிருந்து நிதியுதவியை பெறுகின்றனவாம். சில நிறுவனங்கள், தீவிரவாதம், நக்சலைட் போன்ற போராளிகளுக்கு நிதி யுதவி செய்ய பணம் பெறுகின்றனவாம். சில என்ஜிஓ நிறுவனங்களை பாஜக அரசு வேண்டும் என்றே குறிவைத்து வேட்டையாடுவதாக சில என்ஜிஓ நிறுவனங்கள் கூறியுள்ளன. ஆனால் தங்களது கை சுத்தமாக இருந்தால் அந்த என்ஜிஓ நிறுவனம் பயப்படவே தேவையில்லை. நாடு முழுவதும் கிட்டத்தட்ட 25 லட்சம் என்ஜிஓ நிறுவனங்கள் உள்ளன. ஆனால் அவை அனைத்தின் மீதும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை, விசாரிக்க வில்லை.

ஐபி விசாரணையின் போது பல என்.ஜி.ஓ நிறுவனங்கள் நக்சலைட்டுகள் போல செயல் படுவதாக தெரியவந்துள்ளது. இந்த நிறுவனங்களுக்கு வெளி நாட்டிலிருந்து பணம் பெருமளவில் வருகிறது. இந்த பணத்தை வைத்து நாட்டில் ஏழைகள், நலிவடைந்த பிரிவினரை தூண்டி, அரசின் வளர்ச்சி திட்டங்களுக்கு முட்டுக் கட்டை போடும் வேலையை இந்த நிறுவனங்கள் செய்கிறதாம்.

தங்களுக்கு வரும் வெளிநாட்டுப் பணத்திற்கு இவர்கள் காரணம் காட்டினாலும் கூட, அரசுக்கு எதிரான செயல்பாடுகளுக்கே அது செலவிடப் படுகிறது என்பதால் தான் இவை மீது விசாரணையும், நடவடிக்கையும் அவசியமாகிறது நக்சலைட்கள் நேரடியாக அரசு படைகளுடன் மோதுகிறார்கள். ஆனால் இந்த நிறுவனங்கள் பணத்தைவைத்து அரசுக்கு எதிராக போராடுகிறார்கள். இது தான் இவர்களுக்கு இடையே உள்ள ஒரே வித்தியாசம்.

ஐபியின் கண்காணிப்பு வளையத்தின்கீழ் ரிவைவல் ஆப் இஸ்லாமிக் ஹெரிடேஜ் சொசைட்டி, ரபீதா அல் ஆலம்அல் இஸ்லாமி, சொசைட்டி ஆப் சோசியல் ரிபார்ம்ஸ், கத்தார் சாரிட்டபிள் சொசைட்டி, இஸ்லாமிக் ரிலீப் ஏஜென்சி, அல் முன்டடா அல் இஸ்லாமி, அல் போர்கான் பவுண்டேஷன், இன்டர்நேஷனல் ரிலீப் ஆர்கனைசேஷன், குவைத் ஜாயின்ட் ரிலீப் கமிட்டி, முஸ்லீம் எய்ட் பங்ளாதேஷ் ஆகியவையும் உள்ளன.

இவை அனைத்தும் வங்க தேசத்தைச் சேர்ந்த தீவிரவாத அமைப்பான ஜமாத் உல் முஜா ஹிதீன் அமைப்புக்கு ஆதரவான என்.ஜி.ஓ அமைப்புகள் ஆகும். இந்தநிறுவனங்கள் முதலில் வங்க தேசத்துக்கு எதிரான செயல்பாடுகளுக்காக பணம்கொடுத்து உதவி் வந்தன. பின்னர் இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகளுக்கும் இவை நிதி யுதவி அளித்து வந்துள்ளன. மத்திய அரசு துரிதமாக செயல் படாவிட்டால் இவர்கள் அல் கொய்தா, சிமி உள்ளிட்ட அமைப்புகளுக்கும் நிதியுதவி அளிக்கும் அபாயம் ஏற்படும் என்று ஐபி எச்சரிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.