காஸ்மானியத்தை வங்கிகள் மூலம் பெறும் திட்டத்தில் 10 கோடிபேர் இணைந்துள்ளதற்கு பிரதமர் நரேந்திரமோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இதன் மூலம் அரசின் மானியம் உரியபயனாளிக்கு கிடைக்கும் அதேநேரத்தில் கள்ளச் சந்தையின் செயல்பாடுகளும் முடிவுக்கு வரும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி, தனது டிவிட்டர் பக்கத்தில், 'காஸ் மானியத்தை பயனாளிகளுக்கு நேரடியாக வங்கிகள்மூலம் வழங்கும் (பாஹல் யோஜனா) திட்டத்தில் 10 கோடி பேர் இணைந்துள்ளனர்.

இதுதொடர்பாக மோடி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:

சமையல் எரிவாயு தொடர்பான நேரடிமானியத் திட்டத்தில் இதுவரை 10 கோடி வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர். இத்திட்டத்தின் மூலம் சந்தை விலையில் சமையல் எரி வாயுவை வாங்குவதற்கு வாடிக்கையாளர்களின் வங்கிக்கணக்கில் மானியத் தொகை செலுத்தப்படுகிறது.

இத்திட்டத்தில் இரண்டே மாதங்களில் இவ்வளவு பேர் இணைந்ததற்காக அதிகாரிகளுக்கும், பயனாளிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

கள்ளச் சந்தையில் எரிவாயு உருளைகள் விற்கப்படுவதற்கு முற்றுப் புள்ளி வைப்பதோடு, மக்களை மானியமானது மேலும் திறம்பட சென்றடைவதையும் இத்திட்டம் உறுதிப்படுத்துகிறது. தேசத்தை கட்டமைப்பதில் இதன்பங்கு முக்கியமானதாகும்.

உலகிலேயே மிகப் பெரிய நேரடி மானியத்திட்டம் இதுவாகும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் மொத்தமுள்ள 15.3 கோடி சமையல் எரிவாயுஉருளை வாடிக்கையாளர்களில் 65 சதவீதம்பேர் இந்த நேரடி மானிய திட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்திட்டமானது, சீனா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் உள்ள நேரடிமானியத் திட்டங்களை முந்தியுள்ளது. ஏனெனில் அந்நாடுகளில் இத்திட்டத்தின்கீழ் வரும் பயனாளிகளின் எண்ணிக்கை 2.2 கோடிக்கும் அதிகமாக இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில், 'காஸ் மானியத்தை பயனாளிக்கு நேரடியாக வழங்கும்திட்டம், 54 மாவட்டங்களில் கடந்த நவம்பர் 15ம் தேதி தொடங்கப்பட்டது. பின்னர் ஜனவரி 1ம் தேதி முதல் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இப்படி காஸ்மானியத்தை உரியவர்களுக்கு அவர்களது வங்கிகணக்கில் டெபாசிட் செய்வதன் மூலம் கள்ளச்சந்தையின் செயல்பாடுகள் தடுக்கப்படுவது மட்டும் அல்லாமல் சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசால் சேமிக்கமுடியும்' என்றார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.