நியூயார்க் டைம்ஸின் பாரத பிரதமர் மோடிக்கு எதிரான மதச்சார்பின்மை புகார் ஒன்று அணுசக்தி ஒப்பந்தத்தில் அமெரிக்காவின் எதிர்பார்ப்பு மோடியிடம் எடுபடாமல் போன எரிச்சலாக இருக்கலாம், அல்லது கிறிஸ்துவ மிஷனரிகளின் அழுத்தமாக இருக்கலாம்.

சமிபத்தில் இந்தியா வந்து சென்ற அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியாவின் மதச்சார்பிமை தொடர வேண்டும் என்று ஆருடம் கூறிச்சென்றார் , அவரது ஆருடத்தை ஆமோதிக்கும் விதமாகவும் , விளக்கம் தரும் விதமாகவும் "மதவாத சம்பவங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து கடைபிடிக்கும் மவுனம் மிகவும் அபாயகரமானது" என்ற தலைப்பில் தலையங்கம் தீட்டியுள்ளது. அதில் டெல்லியில் இரண்டு தேவாலயங்கள் தாக்கப்பட்டதாகவும் , 200 கிறிஸ்தவர்களும் 100 இஸ்லாமியர்களும் தாய்மதமான இந்து மதத்துக்கு இந்து அமைப்புகளால் மாற்றப்பட்டதாகவும், இத்தகைய மதவாத அமைப்புகள் நெருப்புடன் விளையாடுவதாகவும் , இது குறித்து பிரதமர் மோடி வாய் திறக்க மறுக்கிறார் என்றும், இவரது தொடர் மௌனம் இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு மிகவும் அபாயகரமானது என்றும் விமர்சித்துள்ளது.

பத்திரிக்கைகளில் விமர்சனம் என்பது சாதாரணமான ஒன்றே. இருப்பினும் நியூயார்க் டைம்ஸின் இந்த விமர்சனத்தை எதிர்க் கச்சிகளும் , குறிப்பாக அமெரிக்காவை எதற்கு எடுத்தாலும் கடுமையாக எதிர்க்கும் கட்சிகளும் கையிலெடுத்துக் கொண்டு தாம் தூம் என்று குதிப்பது வேடிக்கையாகவே உள்ளது.

இந்தியாவில் ஏதோ ஒரு மூலையில் மதவழிபாட்டு தளங்கள் அடிக்கடி சேதப்படுத்தப் படுவதும், உண்டியல் திருட்டு , சிலை கடத்தல் போன்றவையும் சாதாரண ஒன்றே. மேலும் மதமாற்றம் என்பதும் இந்தியாவில் காலம்,காலமாக தொடரும் நிகழ்சிகளே. இஸ்லாமிய மன்னர்கள் இந்துக்களை மிரட்டி மதம் மாற்றினார்கள் என்றால், ஆங்கிலேயர்களும் , அதனை தொடர்ந்து வந்த கிருஸ்துவ மிஷனரிகளும் கல்வி, வேலைவாய்ப்பு , மருத்துவ உதவிகளை காட்டியே மக்களை மதம் மாற்றினர். இப்படி இந்து மதத்திலிருந்து சென்றவர்களின் எண்ணிக்கை மட்டும் பல கோடியாக இருக்க , வெறும் 300 பேர் தாய்மதம் திரும்பியதற்காக தலையங்கம் எழுதுகிறது நியூ யார்க் டைம்ஸ் .

பலாயிரம் இந்துக்கோயில்கள் இடிக்கப்பட்ட போதும் , பல கோடி இந்துக்கள் மதம் மாற்றப்பட்ட போதும் அமைதியிலக்காத இந்தியா . மோடியின் அமைதியால் அமைதியிழந்து விடுமா?. 

தமிழ் தாமரை VM வெங்கடேஷ்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.