தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முழு அளவிலான முதல் பொதுபட்ஜெட்டை மக்களவையில் இன்று சனிக் கிழமை காலை 11 மணியிளவில் மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி தாக்கல்செய்து உறையாற்றினார்.

மிகுந்த எதிர் பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முழு அளவிலான முதல் பொதுபட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்:

*கட்டமைப்பு மேம்படுத்த 77 ஆயிரம் கோடி

* 12 ரூபாய் பிரிமீயத்தில் ரூ. 2 லட்சம் விபத்து காப்பீடு

* விவசாயிகள் நலனுக்கு 25 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

* கிராமப்புற வளர்ச்சிக்கு 25 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

* நீர்ப்பாசன திட்டம் பலப்படுத்த திட்டம்:

* வீட்டில் ஒருவருக்கு வேலை

* தனி நபர் வரிச்சலுகையில் மாற்றம் ஏதுமில்லை

* ரூபாய் மதிப்பு 6.4 சதம் அதிகரிப்பு .

* நிதி பற்றாக்குறை 4. 1 சதவீதமாக பராமரிக்க திட்டம்

* அனைத்து கிராமங்களுக்கும் சாலை வசதி

* 1 லட்சம் கி.மீட்டர் ரோடு அமைக்க திட்டம்

* 6 கோடி டாய்லெட்டுகள் கட்டி முடிக்க திட்டம்

* பழங்குடி மக்களுக்கு 19 ஆயிரத்து 900 கோடி ஒதுக்கீடு

* ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு கூடுதலாக 5 ஆயிரம் கோடி

* பெண்கள் பாதுகாப்புக்கு கூடுதலாக நிர்பயா திட்டம் ஆயிரம் கோடி ஒதுக்கீடு

*அசோக சக்கரம் பொறிக்கப்பட்ட தங்க நாணயம்

*கருப்பு பணம் ஒழிப்பில் நடவடிக்கை

கருப்புப் பண பதுக்களில் ஈடுபட்டு குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், அவர்கள் ஜாமினில் வெளிவர முடியாது.

மேலும் வருமன வரியை தாக்கல் செய்யாதவர்களுக்கு 7 ஆண்டு சிறை. வருமான வரி கட்டாதவர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

* வரலாற்று பாரம்பரிய இடங்களை மேம்படுத்த திட்டம்

*கோவா, கர்நாடகா, வாரணாசிபுனித ஸ்தலங்கள் மேம்படுத்தப்படும்

* சிறுபான்மை இளைஞர் வேலைவாய்ப்புக்கு புதிய திட்டம்

*எரிசக்தி திட்டத்தில் உற்பத்தி பெருக்க திட்டம்

*கர்நாடகாவில் ஐ.ஐ.டி., மையம்

* பெண்கள் , குழந்தைகள் முன்னேற்றத்திற்கு 10, 350 கோடி

*மதிய உணவு திட்டத்திற்கு 68, 968 ஆயிரம் கோடி

கல்வி, மதிய உணவுத் திட்டத்துக்கு 68,968 கோடி ரூபாய் ஒதுக்கீடு மற்றும் அமிர்தசரஸில் முதுநிலை தோட்டக்கலைக் கல்லூரியும், டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் 2.5 லட்சம் கிராமங்களுக்கு இணையதள வசதியும் கொண்டு வரப்படும் என்று தெரிவித்துள்ளார்.

*ராணுவ மேம்பாட்டுக்கு 2.46 லட்சம் கோடி

*1.1 கோடி பேருக்கு நேரடி மானியம் விஸ்தரிக்கப்படும்

*விசா ஆன் அரைவில் 150 நாடுகளுக்கு வழங்கப்படும்

*வணிக நிறுவனங்களுக்கான வரி 25 சதவீதம் குறைப்பு

*கஸ்டம்ஸ் வரி குறைக்க திட்டம்

*ரூ. 1 லட்சத்திற்கு மேல் பொருள் வாங்கினால் பான் கார்டு அவசியம்

*தமிழகத்தில் எய்ம்ஸ் தகுதியிலான மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம்

* சேவை வரி 12.36 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக அதிகரிப்பு

* ஆண்டு வருமானம் ரூ.1 கோடிக்கு மேல் இருந்தால் 2 சதவீதம் கூடுதல் வரி

* கூடங்குளம் 2வது அணுமின் நிலையம் உற்பத்தி துவக்கும்

* கோரப்படாத ரூ.3000 கோடி பி.எப். நிதியை மூத்த குடிமக்கள் நலனுக்கு பயன்படுத்தப்படும்.

* தொழில் முனைவோரும் ஊக்குவிக்க கடன் வசதி

* சிறு தொழில் நிறுவனங்களுக்கு எளிதில் கடன் கிடைக்க முத்ரா வங்கி துவக்கப்படும்.

*சிகரெட், குட்கா பொருட்களுக்கு கூடுதல் வரி

* யோகா வகுப்புகளுக்கு சேவை வரி ரத்து

* அறக்கட்டளை பிரிவின் கீழ் யோகா

*திட்டமிடாத செலவுகள்; 13, லட்சத்து, 12 ஆயிரத்து 200 கோடி

*பெண் குழந்தை சேமிப்பு திட்டத்தில் வரி விலக்கு

*தூய்மை இந்தியா திட்டத்திற்கு நிதி அளித்தால் வரி விலக்கு

*ஒய்வூதிய திட்டத்திற்கு வரி விலக்கு

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.