ரயில்வே தடங்களை விஸ்தரிப்போம் , இருக்கும் தடங்களை தரம் உயர்த்துவோம், பயணிகள் கட்டணத்தை உயர்த்தாமல், மக்களுக்கான சலுகைகளையும், வசதிகளையும் உலக தரத்துக்கு உயர்த்துவோம், ரோம் நகரம் ஒன்றும் ஒரே நாளில் உருவாக்கப்பட வில்லை என்று மோடியின் தொலை நோக்கு பார்வையை சொல்லாமல் சொல்லியுள்ளது சுரேஷ் பிரபுவின் ரயில்வே பட்ஜெட்.

இந்திய ரயில்வே உலகிலேயே மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாகும், எனவே இத்துறையின் முக்கியத்துவத்தையும், வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு வருடம் வருடம் தனி பட்ஜெட் அறிவிக்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது. ஆனால் வளர்சியைத்தான் காணோம். காலங்கள்தான் ஓடின காட்சிகள் என்னவோ ஆங்கிலேயேன் விட்டுச்சென்ற கட்டுமானகளே இத்துறைக்கு இன்னும் உயிர் தந்து கொண்டிருக்கிறது .

அதுவும் கடந்த இருபது வருடங்களாக பெயரளவுக்கு சம்பந்தப் பட்ட அமைச்சர்கள் தங்கள் சொந்த மாநிலங்கள், சொந்த தொகுதிகளுக்கு அதிகமான இரயில்களை அறிவிப்பதும், அந்த திட்டத்துக்கு ஆரம்ப கட்டமாக சில கோடிகளை ஒதுக்கிவிட்டு அமைதியாகி விடுவதும். பிறகு அவரை தொடர்ந்து வரும் அடுத்த அமைச்சரும் முன்னவர் கொண்டுவந்த திட்டங்களுக்கு முக்கியத்துவம் தராமல் முன்னவரை போன்று தனது தொகுதி, மாநிலம் என முன்னுரிமை தந்து அன்றைய செய்தியில் முக்கியத்துவம் பெற்றுவிடுவதில் மட்டுமே குறியாக இருப்பதும் என்கிற விதத்திலேயே இருந்தது .

கடந்த முப்பது வருடத்தில் 1.60 லட்சம் கோடி மதிப்பிலான 674 திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன, அதில் வெறும் 317 திட்டங்கள் மட்டுமே நிறைவேற்றப் பட்டுள்ளன. மீதி 357 திட்டங்களை நிறைவேற்றவே 1.80 லட்சம் கோடி தேவை. இந்நிலையில் தான் பெயரளவுக்கு புதிய ரயில்களையும் அறிவிக்காமல், கட்டணத்தையும் உயர்த்தாமல், உலக தரம் வாய்ந்த தூய்மைக்கும், பயணிகளுக்கான வசதிகளுக்கும். ரயில்களின் உட்கட்டமைப்புக்கும் முன்னுரிமை தரும் விதமாக அமைந்துள்ளது.

அனைத்து மாநிலங்களும் பயன்பெறும் வகையில், ரூ.96 ஆயிரத்து 182 கோடி செலவிலான மின்மயமாக்குதலோடு, ரெயில் பாதைகளை இரட்டை ரெயில் பாதைகள், 3 ரெயில் பாதைகள், 4 ரெயில் பாதைகளாக்கும் 77 திட்டப்பணிகள் எடுத்துக்கொள்ளப்படுவதிலும், பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவதிலும் அறிவிப்புகள் வெளியிட்டுள்ளது .

திட்டமிட்டு பயணம் செய்பவர்கள் வசதிக்காக 4 மாதங்களுக்கு முன்பே டிக்கெட்டை பதிவு செய்துவிடலாம். பயணிகளுக்கு ரெயிலின் வருகை, குறிப்பிட்ட இடத்தில் சேருவது போன்ற தகவல்கள் எஸ்.எம்.எஸ். மூலம் அறிவிக்கப்படும், 19 வழித்தடங்களில் இப்போது மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் ரெயில்களை, 160 முதல் 200 கிலோ மீட்டர் வேகம்வரை செல்லும் வகையில் தரம் உயர்த்துதல்,

இப்போதுள்ள ரெயில் பாதைகளிலேயே புல்லெட் ரெயில் விட முயற்சி, பதிவு செய்யப்படாத ரெயில் டிக்கெட்டுகளை செல்போன் போன்ற சாதனங்கள் மூலம் 5 நிமிடங்களில் எடுத்துக்கொள்ளும் வசதி, பெண்கள் பெட்டிகளில் கண்காணிப்பு கேமரா, 24 மணி நேரமும் பயணிகள் குறைகளுக்காக 138, பாதுகாப்பு தொடர்பான புகார்களுக்காக 182 ஆகிய ஹெல்ப்லைன்கள், பயணத்தின்போது உணவு வசதி, 400 ரெயில் நிலையங்களில் வை–பை வசதி, ரெயில் நிலையங்களில் கழிப்பறை, எஸ்கலேட்டர் போன்ற பயணிகள் வசதிகளுக்கே முன்னுரிமை

கடற்கரை ரயில் வழித்தடம் அமைத்தல், 3,438 ஆளில்லா ரயில் கடவுகளில் ரூ.6,581 கோடியில் பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைத்தல். 1000 மெகா வாட் சூரியஒளி மின் உற்பத்தித் திட்டத்துக்கு ஒப்புதல், மின் கட்டணத்தை சமாளிக்க, தனியார் மின் உற்பத்தி நிலையங்களிடம் முன்னதாகவே மின் ஒப்பந்தங்கள் செய்துகொள்ளல். இதனால், சுமார் ரூ.3,000 கோடியை மிச்சப் படுத்துதல். அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.8.5 லட்சம் கோடி ரயில்வே துறையில் முதலீடு.

ரயில் தடத்தை 20% அதிகரிக்கச் செய்வதன் மூலம், அதாவது தற்போதுள்ள 1,14,000 கி.மீ. வழித்தடத்தை 1,38,000 கி.மீ. ஆக அதிகரிப்பதன் மூலம், ஒரு நாளைக்கு பயணிகள் எண்ணிக்கையை 2 கோடியிலிருந்து 3 கோடியாக உயர்த்துதல், இரயில்வே பல்கலைக் கழகம் அமைப்பதன் மூலம் உயர் தொழில் நுட்பத்தை கண்டறியும் ஆராய்ச்சியை தீவிரப்படுத்துதல் என தொலை நோக்கு பார்வையுடன் நாளைய வரலாறு படைக்கு நோக்கத்துடனேயே இந்த பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரவின் ரோம் நகரம் ஒரே நாளில் கட்டமைக்கப்பட்டு விடவில்லை என்கிற கருத்து இந்திய ரயில்வே ஒன்றும் ஒரே நாளில் கட்டமிக்கப்பட்டு விடவில்லை என்கிற நாளைய வரலாற்று உதாரணங்களை உருவாக்கும் சக்திப் படைத்தது. மோடியின் எதிர்கால பாரதம் குறித்த கணவின் வெளிப்பாடும் கூட.

தமிழ்த் தாமரை VM வெங்கடேஷ்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.