மகளிர் இச்சமுதாயத்தில் ஆண்களுக்கு நிகரான மக்கள் தொகையில் சரிசமமாக இருந்தாலும் அவர்கள் சமமாக சரியாக மதிக்கப்படுகிறார்களா என்றால் இன்றும் அது கேள்விக்குறியாகத் தான் உள்ளது. பெண்கள் உரிமைக்காக போராடினார்கள், போராடுகிறார்கள், போராடுவார்கள் என்று இந்த இலக்கணத்திற்கும் பொருந்தியிருக்கிறார்கள்.

உடல்நலத்தைப் பேணுவதிலும், உண்மையைப் பாதுகாப்பதிலும் சமூக அங்கீகாரத்தை அளிப்பதிலும், பதவி உயர்வு அளிப்பதிலும் முன்பை விட இன்று முன்னுரிமை அளிக்கப்படுகிறதே தவிர முதல் உரிமை அளிக்கப்படுவதில்லை. ஆனால் இவையெல்லாம் தாண்டி பெண்கள் உயர்ந்து கொண்டு தான் சென்று கொண்டிருக்கிறார்கள். பெண்களின் வாழ்க்கைத்தரம் உயரந்தால் தான் இச்சமூகம் அனைத்து தளத்திலும் உயரும். ஆக சமூகம் உயர வேண்டுமானால் பெண்களின் வாழ்கை தரம் உயர்ந்தே ஆக வேண்டும்.

எங்கும் பாலியல் கொடுமைக்கு தப்பித்தவளாக வரதட்சனை கொடுமைக்கு தப்பித்தவளாக குடும்ப வன்முறையிலிருந்து தப்பித்தவளாக பெண்சிசு கொலையிலிருந்து தப்பித்தவளாக இப்படி பல தப்புகளிலிருந்து தப்பித்தவளாக இருக்கப்படுகிறார்கள். ஒப்புயர்வு பெற்றவர்களாக மாற வேண்டும். அந்த மாற்றம் கண்ணில் தெரிய ஆரம்பித்துவிட்டது. விண்ணில் உயர்ந்தும் பறக்கிறாள் பெண் இந்த மண்ணில் அவள் வாழ்வை சிறக்கச் செய்வது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். பெண்கள் அனைவரும் உடல் நலத்தோடு உள்ள நலம் பெற்று உயர வேண்டுமென வாழ்த்துகிறேன். தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் அனைத்து பெண்களின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி பொங்க வேண்டும். டாஸ்மாக் இல்லாத தமிழகமே தமிழ்ப்பெண்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தரும். டாஸ்மாக் இல்லாத தமிழகம் படைக்க அனைத்து மகளிரும் சபதம் ஏற்போம்.

என்றும் மக்கள்;; பணியில்

(Dr. தமிழிசை சௌந்தரராஜன்)

பாஜக மாநில தலைவர்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.